Sri Thiruvazhmarban Temple- Thiruppathisaram

ஸ்ரீ திருவாழ்மார்பன் திருக்கோயில் – திருப்பதிசாரம்

Sri Tiruvazmarban Temple- Tirupatisaram

மூலவர் : திருவாழ்மார்பன்

தாயார் : கமலவல்லி நாச்சியார் , மார்பில் மஹாலக்ஷ்மி

தலதீர்த்தம் : லட்சுமி தீர்த்தம்

ஊர் : திருப்பதிசாரம் , திருவண்பரிசாரம்

மாவட்டம் : நகர்க்கோயில் , தமிழ்நாடு

  • நம்மாழ்வார் மங்களாசனம் செய்த கோயில்
  • நம்மாழ்வார் தாயார் பிறந்த தலம்
  • மூலவர் ஒன்பது அடி உயரத்தில் ஒரு காலை மடக்கிய நிலையில் உட்கார்ந்து காணப்படுகிறார் . இவர் ‘கடு சக்கரை யோகம்’ என்ற கூட்டினால் அமைக்கப்பட்டது . கல்லும் சுண்ணாம்பும் சேர்த்து செய்யப்பட்ட உருவத்தின் மேல் கடுகும் சர்க்கரையும் சேர்ந்த ஒருவித பசையினால் பூசப்பட்டுள்ளது அதனால் இவருக்கு அபிசேகம் கிடையாது
  • மலைநாட்டு திவ்ய தேசங்களில் ஒன்று . நம்மாழ்வார் அவதார தலம்
  • தாயாருக்கு தனி சன்னதி கிடையாது , இறைவன் தன் மார்பினில் மஹாலக்ஷ்மியை நிறுத்திக்கொண்டதால் திருவாழ்மார்பன் என்ற பெயருடன் விளங்குகிறார் .
  • சப்தரிஷிகள் சிவனை திருமால் வடிவில் காண சோம தீர்த்தம் என்ற இடத்தில் இறைவனை நோக்கி தவம் இருந்தனர் அவர்களுக்கு சிவன் திருமாலின் வடிவில் வந்து காட்சி தந்தார் . அவரிடம் ரிஷிகள் இந்தஉருவிலேயே இங்கே தங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி அவர் சப்தரிஷிகளுடன் காட்சி தருகின்றனர் . கோயிலின் உள்ளே சிவனின் தனி சன்னதி உள்ளது . இவ் வரலாறு சுசீந்திரம் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .
  • கோயிலின் வெளியே தீர்த்தம் குளம் உள்ளது இக்குளத்தின் கட்டிடம் உடை மாற்றும் அறைகள் 1106 ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டதாகும் .
  • இக்கோயிலில் மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன .1029 , 1129 ,1614 ஆகிய ஆண்டுகளில் இக்கோயிலுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகளை பற்றி அதில் குறிப்புக்கள் உள்ளது .

Phtos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-thiruvazhmarban-temple.html

செல்லும் வழி
நாகர்கோயிலில் அருகில் 5 km தொலைவில் திருப்பதிசாரம் ஊர் உள்ளது . ஆட்டோவில் செல்லலாம் . நகர்க்கோயில் திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ளது .

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *