Sri Swedaranyeswarar Temple- Rajendrapatinam

ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் – ராஜேந்திரப்பட்டினம் (எருக்கத்தம்புலியூர் )

Sri Swedaranyeswarar Temple- Rajendrapatinam

இறைவன் : சுவேதாரணீயேஸ்வரர், குமாரசாமி ,நீலகண்டேஸ்வரர்

தாயார் : வீறாமுலையம்மன் ,அமிதகுஜாநாயகி

தல விருச்சகம் : வெள்ளெருக்கு

தீர்த்தம் : கந்தம்,சுவேதம்

ஊர் : ராஜேந்திரப்பட்டினம்

மாவட்டம் : கடலூர்

  • சிவபெருமானின் சாபத்தால் ருத்திரசன்மர் என்ற ஊமை குழந்தையாக முருகன் அவதரித்து இத்தலத்தில் வந்து வழிபட்டு பேசும் திறனை பெற்றதால் இவருக்கு குமாரசாமி என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார் .
  • ஊமை மற்றும் திக்கி பேசும் குறை உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர் .
  • வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர் பூஜித்த இடங்கள் புலியூர் என்று அழைக்கப்படுகிறது . அதன்படி அவர் இங்கு வந்து பூஜித்ததால் எருக்கன்புலியூர்  என்று அழைக்கப்படுகிறது .
  • சம்பந்தரின் உடன் இருந்து யாழ் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவதரித்த தலம்.
  • வேத கணங்கள் வந்து அதிகமாக வரன்கள் தரும் சிவஸ்தலம் எது என்று விருத்தாச்சலம் பழமலைநாதரை கேட்க அவர் சொல்லிய இடம் இந்த சிவத்தலமாகும் .
  • தேவார பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களில் இத்தலம் 4 வது தலமாகும். தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் இது 215 தேவார தலமாகும் .
  • ஏழாம் நூற்றாண்டில் சிறப்புமிக்க தலமாகும்.
  • இத்தலத்தின் பெருமைகளை அறிந்த தேவர்களும் , முனிவர்களும் இத்தலத்திற்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி அவரை வணங்கினர் . வேடர்கள் இங்குள்ள மரங்களை வெட்டியும் பறவைகளை வேட்டையாடினர் . அவர்களிடம் இருந்து காத்து கொள்ள அவர்கள் தன்னை யாருக்கும் உதவாத எருக்கன் மரமாக மாறி வழிபட்டனர் இதனாலேயே இவூருக்கு எருக்கதன்புலியூர் என்ற பெயர் ஏற்பட்டது .
  • ராஜராஜ சோழன் மகப்பேறு வேண்டி இத்தலத்தில் வழிபட்டு ராஜேந்திர சோழனை ஈன்றதால் இத்தலத்திற்கு ராஜேந்திரப்பட்டினம் என்ற இன்னோரு பெயர் ஏற்பட்டது
  • இக்கோயிலுக்கு சோழர்கள் , பல்லவர்கள்,பாண்டியர்கள் ஆகியோர்கள் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளார் என்பதை இக்கோயிலுள் அமைந்துள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன
  • திருஞானசம்பந்தரின் தேவாரம் , அருணகிரிநாதரின் திருப்புகழ் ,வள்ளலாரின் திருஅருட்பா ஆகியவற்றில் இக்கோயிலை பற்றி பாடி பெருமைசேர்த்துள்ளார்கள் .
  • ராஜா சுவேதன் முன்கரும வினையால் வெண்குஷ்ட நோய் ஏற்பட்டு அவதிப்படும்போது இக்கோயிலின் பெருமையை அறிந்து இங்குள்ள குளத்தில் நீராடி நோயிலிருந்து விடுபட்டான். ஆதலால் இங்கு வந்து நீராடி வேண்டினால் வெண்குஷ்ட நோயிலிருந்து விடுபடலாம் .
  • மார்ச் 16 முதல் 20 வரை சூரிய ஒளி மூலவரின் மேல் விழுகிறது .

அமைவிடம் :
விருதாச்சலத்திலிருந்து ஜெயகொண்டம் போகும் வழியில் 12 km தொலைவில் சாலையின் அருகிலேயே உள்ளது.

அருகில் உள்ள தலம்
1 . பழமலைநாதர் கோயில் – விருத்தாச்சலம்
2 . ஸ்ரீவராஹ பெருமாள் – ஸ்ரீமுஷ்ணம்

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *