Sri Sundara varatharaja & Mahalakshmi Temple-Arasarkoil

ஸ்ரீ சுந்தர வரதராஜ மற்றும் மஹாலக்ஷ்மி கோயில் -அரசர்கோயில்

Sri Sundara varatharaja Perumal temple-Arasarkoil

இறைவன் : சுந்தர வரதராஜர்

தாயார் : சுந்தர மஹாலக்ஷ்மி

ஊர் : அரசர்கோயில்

மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு

Sri Sundara varatharaja Perumal temple-Arasarkoil
  • அதிகம் அறியப்படாத கோயில்களில் இக்கோயிலும் ஒன்று , சுமார் 1000 பழமையான கோயில் சிதலம் அடைந்திருந்த நிலையில் இருந்து இப்போது பராமரிப்புகள் முடிந்து புது பொலிவுடன் காட்சிதருகிறது .
Sri Sundara varatharaja Perumal temple-Arasarkoil
  • காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலைவிட பழமையான கோயிலாகும் .
  • சுந்தர வரதராஜர் பெருமாள் சாலிக்ராம கல்லால் ஆனவர் ,இவர் தனது வலது கரத்தில் தாமரை மலரை ஏந்தியபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் ,இது ஒரு அபூர்வ கோலமாகும்.
  • இக்கோயிலில் வீற்றியிருக்கும் மஹாலக்ஷ்மி மிகவும் பிரபலமானவர் மற்றும் சக்தியானவர் ,பெயருக்கு ஏற்றார் போல் குண்டான கன்னங்களுடன் தாமரை மலரின் மேல் பத்மாசனத்தில் வீட்டிருக்கிறார். இவர் ஆதி மஹாலக்ஷ்மி ஆவார் .
  • தாயாரின் வலது காலில் ஆறு விரல்கள் உள்ளன ,இது ஒரு அபூர்வ அமைப்பாகும் ,ஆறு விரல்கள் என்பது சுக்கிரனின் சக்தியை கொண்டதாகும் ,தாயார் சுக்ர சக்தியை அடக்கி தன்னை வணங்குபவர்களுக்கு அவற்றை தந்து அவர்களின் வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி மகிழ்விப்பார்.
  • 64 லட்சுமி அவதாரங்களின் தாயார் அவர் இங்குள்ள மஹாலக்ஷ்மி ஆதலால் இவரை ஆதி மஹாலக்ஷ்மி என்று அழைக்கிறார்கள். இவரின் மண்டபம் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த அழகிய மண்டபம் ஆகும் மற்றும் இசை தூண்கள் அமைந்த மண்டபம் ஆகும் .
  • பல்லவர்கள் மற்றும் சோழர்கள் இக்கோயிலை நிறுவி பராமரித்து வந்துள்ளார்கள் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sundara-varatharaja-mahalakshmi-temple.html

கோயில் திறந்திருக்கும் நேரம் :
கோயில் கிராமத்தில் அமைந்துள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறிது நேரம் மட்டுமே நடை திறந்திருக்கும் ,ஆதலால் நீங்கள் முன்னரே பட்டாச்சார்யாரிடம் தெரிவித்து விட்டு செல்வது சிறந்தது .
திரு .கண்ணன் பட்டாச்சாரியார் – 9698510956

கோயில் அமைவிடம் :
சென்னையில் இருந்து GST சாலையில் செங்கல்பட்டை கடந்து படாளம் கூட்டு ரோட்டை அடைந்து அங்கு இடது புறமாக திரும்பி சென்றால் ரயில் கிராஸ் வரும் அதையும் தாண்டி சென்றால் அரசர்கோயில் வரும் . GST சாலையில் இருந்து சுமார் 7 km தொலைவில் இவ்வூர் வரும்

Location :

Visited 13.04.2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *