Sri Subramaniya swamy Temple – Maruthamalai

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் – மருதமலை

மூலவர் – சுப்ரமணியர் சுவாமி

தாயார் – வள்ளி , தெய்வானை

தல விருச்சம் – மருதமரம்

தல தீர்த்தம் – மருது சுனை

ஊர் – மருதமலை

மாவட்டம் – கோவை

 

  • இங்கு விநாயகர் மற்றும் முருகன் சுயம்புவாக காட்சி அளிக்கிறார்கள்
  • இங்குள்ள ஆதி முருகன் கோயிலில் முருகன் மற்றும் வள்ளி ,தெய்வானை சுயம்புவாக இருக்கிறார்கள் . ஆதி முருகனுக்கே முதலில் இங்கு அபிசேகம் நடைபெறுகிறது .
  •  பாம்பாட்டி சித்தர் வடித்த சிலையை இங்கு மூலசானத்தில் உள்ளது .இவருக்கு தினமும் மூன்று விதமான அலங்காரங்கள் நடைபெறுகிறது . தினமும் ராஜஅலங்காரம் ,சந்தனக்காப்பு ,விபூதிக்காப்பு அலங்காரங்களில் காட்சி தருகிறார் . பழனியில் உள்ளது போல் இரண்டு கைகளில் ஒரு கை தண்டை பிடித்தபடியும் மற்றோரு கை இடுப்பில் உள்ளதுமாக உள்ளார் . அர்த்தஜாம பூஜையின் பொது மட்டும் அவர் தண்டபாணியாக காட்சி அளிக்கிறார் . இடுப்பில் துண்டை மட்டும் கட்டி கொண்டு எந்தவித அலங்காரமும் இல்லாமல் காட்சியளிக்கிறார் .
  • பாம்பாட்டி சித்தர் சன்னதி கோவிலின் பின் புறத்தில் உள்ளது , அவர் தினமும் முருகருக்கு அபிசேகம் செய்வதாக நம்பப்படுகிறது .
  • பஞ்ச விருச்ச விநாயகர் இங்கு கோவிலின் முதலிலேயே காட்சியளிக்கிறார் இவர் அரசு ,வேம்பு ,அத்தி.வன்னி ,கொரக்கட்டை என்ற ஐந்து மரங்களின் கீழ் உள்ளார் .
  • இவ் மலை மருத மரங்களால் ஆனதால் ‘மருதலைமலை‘ என்று அழைக்கப்படுகிறது . இவ் மரம் மருத்துவ குணம் கொண்டது. மலையின் மேல் உள்ள ஒரு மருதமரத்தின் அடியிலிருந்து ஒரு சுனை சுரக்கிறது அதுவே ‘மருதுசுனை‘ என்று அழைக்கப்படுகிறது . இதுவே இத்தலத்தின் தீர்த்தம் ஆகும் இத்தீர்த்தத்தையே அபிசேகத்திற்கு பயன்படுத்துகிறார்கள் . இவ் மலையை ஆள்வதால் இவரை ‘மருதாச்சலமூர்த்தி‘ என்ற இன்னோரு பெயரை கொண்டு அழைக்கப்படுகிறார்.
  • சுமார் 800 படிகள் மேல் உள்ள கோயில் .
  • நாக தோஷம் , புத்திர தோஷம் , திருமண தோஷம் ஆகியவற்றுக்காக இக் கோயிலுக்கு வருகிறார்கள் .
  • கிருத்திகை , தைபூசம் ஆகிய நாட்களில் சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன .
  • அருணகிரி நாதர் இக் கோயிலை பற்றி பாடியுள்ளார் .
  • ஏழாம் படை வீடாக போற்றப்படும் தலம்.

கோயில் திறந்திருக்கும் நேரம் மற்றும் வழி:

காலை 5 .30 மணி முதல் 1 .00 மணி வரை மாலை 5 .00 முதல் 8 .00 மணி வரை

கோவை பேருந்து நிலையத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .

என்னுடைய India temple tour இணையத்தளத்தில் இந்த முருகன் கோயிலை பதிவிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஒரு முறையேனும் இந்த கோயிலுக்கு சென்று சுப்ரமணியரின் அருளை பெருமாறுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

http://www.marudhamalaimurugantemple.tnhrce.in/

Map :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *