Sri Sivaloganathar Temple- Gramam (Thirumundeeswaram)

ஸ்ரீ சிவலோகநாதர் கோயில் – கிராமம் (திருமுண்டீஸ்வரம் )

Sri Sivaloganathar Temple- Gramam

இறைவன் : சிவலோகநாதர்

தாயார் : சௌந்தரியநாயகி

தல விருச்சகம் : வன்னி மரம்

தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

ஊர் : கிராமம் ,திருமுண்டீஸ்வரம்

மாவட்டம் : விழுப்புரம் ,தமிழ்நாடு

  • தேவார பாடல் பெற்ற சிவத்தலங்களில் 230 வது தலமாகும் . நடுநாட்டு தேவார தலங்களில் 19 வது தலமாகும் . திருநாவுக்கரசர் பாடிய தலமாகும்
  • இந்திரன் மற்றும் பிரம்மா வழிபட்ட தலம் .
  • இறைவன் சிறிய லிங்க திருமேனியுடன் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார் .
  • சிவனின் வாயில் காவலர்கள் திண்டி, முண்டி இக்கோயிலில் வழிபாடு செய்துள்ளார்கள் .அதனாலே இக்கோயிலுக்கு திருமுண்டீஸ்வரம் என்ற பெயர் உண்டு .
  • சொக்கலிங்கம் என்ற மன்னன் தாமரை மேல் எய்த அம்பு தாமரை வடிவில் இருந்த இறைவனின் மேல் பட்டது. அந்த வடுவுடன் இன்றும் காட்சி தருகிறார் .
  • இங்குள்ள கல்வெட்டுகளில் இக்கோயில் மவுலி கிராமம் என்று அழைக்கப்பட்டதாக குறிப்பு உள்ளது . அதுவே இப்போது மருவி கிராமம் என்று அழைக்கப்படுகிறது .
  • சோமேஸ்கந்தர் அமைப்பை சேர்ந்த கோயிலாகும் .
  • திருப்பணி வேலைகள் நடைபெறுகிறது .தங்களால் முடிந்த உதவிகளை செய்துகொடுக்கலாம் .

Photos :

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-sivaloganathar-temple-gramam.html

செல்லும் வழி :
விழுப்புரம் இருந்து அரசூர் வழியாக திருவெண்ணைநல்லூர் செல்லும் வழியில் திருவெண்ணைநல்லூர் முன்னதாக 3 km தொலைவில் உள்ளது.

Location:

        திருச்சிற்றம்பலம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *