Sri Ramanaatheswarar Temple- Porur (Chennai)

ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோயில் -போரூர் (சென்னை )

Sri Ramanaatheswarar Temple, Porur
Main Entrance

சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் இத்தலம் குரு தலமாகும். ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து செல்லலாம்

இறைவன் :ராமநாதீஸ்வரர்

இறைவி : சிவகாமசுந்தரி

ஊர்: போரூர் -சென்னை

பழமை : 1000 வருடங்கள் பழமை

  • இறைவனே இங்கு குருவாக அமர்ந்திருப்பதால் குருபகவானுக்கு செய்யவேண்டிய அனைத்து பூஜைகளும் இங்கு நடைபெறுகின்றன . இவரை வழிபட்டால் குரு அருளை பெறலாம்
  • மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யமுடியாதவர்கள் ,முதன்முதலில் செய்பவர்கள் இங்குள்ள நெல்லி மரத்தின் அடியில் இருந்து தியானத்தை பழகலாம்.
  • வாழ்க்கையில் பிரச்சனை மேல் பிரச்சனை சந்திப்பவர்கள் தொடர்ந்து 11 வியாழக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு ,கடைசியில் தயிர் சாதமும்,சுண்டலும் படைத்தது விரதத்தை முடித்தல் மலை போல் உள்ள பிரச்சனைகளும் பனி போல் விலகிவிடும் .
  • இங்குள்ள கல்வெட்டுகளில் இக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகவும் ராஜேந்திர சோழன் காலத்தில் இக்கோயில் “திருபெருங்கோயில் என்று அழைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது .
  • சிவலிங்கம் நம் உயரத்துக்கு நிகராக 6 அடி உயரத்தில் மிக உயரமாக காட்சிதருகிறார் .
  • ராமர் பூஜித்த லிங்கம் ஆகியதால் இது ராமாயண காலத்து சிவலிங்கம் ஆகும் . ராமேஸ்வரத்துக்கு முன்னதாகவே ராமர் வழிபட்ட தலம் என்பதால் இத்தலத்துக்கு “உத்தர ராமேஸ்வரம் ” என்ற பெயர் உண்டு .
    சிவன் கோயிலில் சடாரி தீர்த்தம் :
  • பொதுவாக பெருமாள் கோயில்களில் மட்டுமே தீர்த்தம் வழங்கி சடாரியில் அருள் வழங்குவார்கள் . போரூர் ராமநாதீஸ்வரர் கோயிலில் திருநீறுடன் தீர்த்தமும் வழங்கி ,சடாரி யாரும் வழங்குகிறார்கள் .பெருமாளின் அவதாரமான ராமபிரான் வழிபட்டதனால் அதை நினைவு கூறும் படி இவற்றை பின்பற்றுகிறார்கள் .

தலவரலாறு :
ராமபிரான் சீதையை தேடி எல்லா இடங்களிலும் அலைந்தபோது இலுப்பை மரங்கள் நிறைந்த இந்த போரூர் காட்டில் வழியாக அவர் சென்றபோது அவர் கால் ஒரு நெல்லி மரத்தின் வேர் இடறியது அவர் உள்ளுணர்வில் அவ்விடத்தில் சிவலிங்கம் உள்ளது போல் தோன்றியது . உடனே அவர் சிவலிங்கத்தின் சிரசில் மிதித்ததால் மனம் வருந்தி அதனால் ஏற்பட்ட தோஷத்தை போக்க அந்த இடத்திலேயே அமர்ந்து ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்கனியை மட்டும் உண்டு 48 நாட்கள் அவர் தவம் புரிந்தார் . அன்பே உருவான சிவபெருமான் அவருடைய தவத்தை கண்டு மெச்சினார். 48 வது நாள் பூமியை பிளந்து பெரும் சத்தத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டது அவருடைய விஸ்வரூப தரிசனத்தை கண்ட ராமர் மெய்சிலிர்த்து அவரை அன்பால் ஆரத்தழுவிக்கொண்டார் உடனே இறைவன் விஸ்வரூப தரிசனத்திலிருந்து 6 அடி அமிர்தலிங்கமாக மாறி காட்சிதந்தார் . ராமருக்கு சீதை இருக்கும் வழியை காண்பித்தார் .

கோயில் அமைவிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம்
காலை 6 .00 -11 .30
மாலை 4 .30 -8 .30

போரூர் சந்திப்பில் குன்றத்தூர் சாலையில் மின்வாரிய அலுவலகத்தை கடந்து இடது புறம் திரும்பினாள் இவ் கோயிலை அடையாளம் . அருகிலேயே பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது .

Location Map :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *