Sri Parthasarathy Temple, Triplicane

ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் – திருவல்லிக்கேணி

Sri Parthasarathy Temple, Triplicane

இறைவன் : பார்த்தசாரதி , வேங்கடகிருஷ்ணன்

தாயார் : ருக்மணி

தல விருச்சம் : கைரவினி ,புஷ்கரனி

புராண பெயர் : பிருந்தாரன்ய   க்ஷேத்ரம்

ஊர் : திருவல்லிக்கேணி ,சென்னை

மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு

மங்களாசனம் : பேயாழ்வார் ,திருமங்கையாழ்வார் ,திருமழிசை ஆழ்வார் .

பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசமாகும் .

இங்கு இறைவன் 9 அடி உயரத்தில் குடும்ப சகிதமாக காட்சி தருகிறார் .அது மட்டும் இல்லாமல் இங்கு இறைவன் வேறு எங்கும் காண முடியாத மீசையோடு காணப்படுகிறார் .

புராண காலத்தில் இவ் ஷேத்திரம்  பிருந்தாரன்ய   க்ஷேத்ரம் என்று அழைக்கப்பட்டது . மகாபாரத்தில் பஞ்சபாண்டவர்களில் பார்த்தனாகிய அர்ஜுனனுக்கு ,அவனின் ரதத்தை செலுத்தும் சாரதியாக பகவான் கண்ணன் இருந்தார் .அந்த கண்ணனே இங்கு கோயில் கொண்டுள்ளதால் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார் .

இவ்விடத்தில் முன்னர் ஒரு கேணி அதாவது குளம் இருந்ததாகவும் அதில் நிறைய அல்லி மலர்கள் நிறைந்திருந்தால் ‘திரு அல்லி கேணி’  என்று அழைக்கப்பட்டது .நாளடைவில் இது திருவல்லிக்கேணி என்றானது .

மிகவும் பழமையான கோயிலாகும் ,சுமார் 2000 ஆண்டுகள் முற்பட்ட புராதான கோயிலாகும். இக்கோயில் 7 ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக  பல்லவர்கள் காலத்தில் இக்கோயில் வடிவமைக்கப்பட்டது . பின்னர் சோழர்கள் ,விஜயநகர பேரரசர்கள் இக்கோயிலை புதுப்பித்தார்கள்.

இக்கோயில் இறைவனை சுவாமி விவேகானந்தர் ,மகாகவி பாரதியார் , கணித மேதை ராமானுஜர் ஆகியோர் தரிசனம் செய்துள்ளார்கள் .பாரதியார் தன்னுடைய கண்ணன் பாட்டில் இத்தல இறைவனை பற்றியே நிறைய பாடியுள்ளார் .

இக்கோயிலில் திருமாலின் 5 அவதாரங்களை தனி தனி சந்நிதிகள் உள்ளன . அவை நரசிம்மர் ,ராமர் ,வரதராஜர் ,ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர் .

1.பார்த்தசாரதி சன்னதி :  இக்கோயிலின் முதன்மையான சன்னதியாகும். இங்கு பார்த்தசாரதியான வேங்கட கிருஷ்ணன் இருக்கிறார் .இவருடைய ஒரு புறத்தில் ருக்மணி தாயாரும் பலராமரும் ,மறுபுறத்தில் சாத்தகி,பிரத்யும்நன் ,அநிருத்தன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை தருகிறார் .தன்னுடைய மனைவி ,தமையன் ,இளையோன் ,புதல்வன் ,பேரன் என்று முத்தலைமுறையுடன் சேவை தருவது தனி சிறப்பாகும்.

இத்தலத்தில் பெருமான் துரியோதனுக்கு தான் கொடுத்த வாக்கின் படி கையில் சக்ராயுதம் இல்லாமல் ,இடது புறத்தில் இருக்கும் சங்கானது வலது கரத்திலும் ,சாரதிக்கே உரிய முறுக்கு மீசையுடன் சேவை தருகிறார் . அவருடைய முகத்தில் விழுப்புண்கள் இருக்கின்றன ,இவ்வை பாரத போரின் போது ஏற்பட்டவை என்று கூறுகிறார்கள் .இடது பகுதியில் வாள் ஒன்று தொங்குகிறது ,இன்னொரு கையில் சாட்டை இருக்கிறது .  தொண்டைமான் சக்ரவர்த்தியின் பிராத்தனைக்கு இணங்க வேங்கடவன் இங்கு சேவை தந்தருளிய காரணத்தால் வேங்கட கிருஷ்ணன் என்ற பெயர் பெற்றார் .

2 . ரெங்கநாதர் :     மூல சன்னதியின் அருகிலேயே கிழக்கு நோக்கியவாறு மூலவர் அரங்கநாதர் கிடந்த கோலத்தில் தாயார் வேதவல்லியுடன் சேவை புரிகிறார் . இவருக்கு ‘மணநாதன்’ என்ற மற்றொரு பெயர் உண்டு .      

3 . வரதராஜ பெருமாள் : மூன்றாவது சன்னதியில்  தன்னுடைய வாகனமாகிய கருடன் மீது அமர்ந்தபடி வரதராஜ பெருமாள் சேவை தருகிறார் .இவருக்கு தேவப்பெருமாள் என்று பெயர் உண்டு .

4 . நரசிம்மர் : நரசிம்மர் வீற்றியிருக்கும் கோலத்தில் மேற்கு புறமாக சேவை புரிகிறார் .இவர்  இங்கு மிகவும் பிரசித்து பெற்றவர் ஆவார் .இவரை வழிபட்டு அவருக்கு உரிய சங்கு தீர்த்தத்தில் நமது முகத்தில் தெளித்து ,அத் தீர்த்தத்தை அருந்த நம்மை பீடித்திருக்கும் துஷ்ட ஆவிகள் , செய்வினைகள்,பில்லி,சூனியம் ,ஏவல் ,தேவையற்ற பயங்கள் போன்ற பாதிப்புகள் நீங்கும் .இவர் யோக நிலையில் உள்ளதால் இவரின் இவரின் சன்னதி உள்ள மணிகளுக்கு சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை .அக்ரி மஹரிஷிக்காக காட்சி தந்த தலம்.இவருக்கே காலையில் முதல் பூஜை நடைபெறும் .

5 . ஸ்ரீராமர் : ஐந்தாவது சன்னதியில் மூலவர் உள்ள பிரகாரத்தில் சக்ரவர்த்தி திருமகனாக ராமர் நின்ற கோலத்தில் சேவை அளிக்கிறார் .இவர் குடும்ப சகிதமாக காட்சி தருகிறார் .

இவ்வாறு இங்குள்ள 5  மூலவர்களும் மங்களாசனம் பெற்றிருப்பதால் இவ் தலத்திற்கு பஞ்ச மூர்த்தி தலம் என்ற பெயரும் உண்டு .

இக்கோயிலில் படைக்கப்படும் நைவேத்யமான சக்ர பொங்கல் மிகவும் பிரசித்துப் பெற்றதாகும் . வைகுண்ட ஏகாதசி அன்று ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் பெருமாளை மீசை இல்லாமல் தரிசிக்கலாம் .

சுமதிராஜன் என்றும் திருமாலின் பக்தன் பெருமாளை குருஷேத்திர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனை தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது .தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம் வேண்டினார் .இறைவனும் இங்கு தேரோட்டியாக காட்சி தந்தார் .அதே கோலத்தில் இங்கே தங்கும்படி வேண்டவே, இவ் திருக்கோலத்தில் குடும்ப சமேதராக சேவை தருகிறார். இதனால் இவரை வணங்கினால் குடும்ப ஒற்றுமை தழைக்கும் என்று நம்பப்படுகிறது .

திறந்திருக்கும் நேரம் :

காலை 5 .30 மணி முதல் 12 .30 வரை ,மாலை 4 .30 முதல் 9 .00 மணி வரை 

செல்லும் வழி:

சென்னையின் மிகவும் பிரசித்திபெற்ற இடமான திருவல்லிக்கேணி இடத்தில் இவ் கோயில் அமைந்துள்ளது . சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 4 km தொலைவிலும் , சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 4 km தொலைவிலும் , விமான நிலையத்தில் இருந்து சுமார் 17 km  தொலைவிலும் இவ் கோயில் அமைந்துள்ளது .

Location:

English :An exceptional significance lies in the fact that the temple houses Lord Vishnu in the form of Parathasarthy. The word Partha in Sanskrit means Arjuna and the word Sarathy means Charioteer. Lord Krishna was the charioteer of Arjuna in Kurukshetra war of Mahabharata.The structure dates back to the 8th century when it was built by the Pallavas and resurrected by the Vijayanagara Kings in the 11th century. Revered art lover King Narasimhavarman I, also known as Mahamalla of Pallava dynasty, is believed to have laid the foundation of the temple.

Om Namo Narayana Nama !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *