Sri Palvanna Nathar Temple-Sivapuri (Thirukhazipalai)

ஸ்ரீ பால்வண்ண நாதர் கோயில் – சிவபுரி (திருக்கழிப்பாலை )

Sri Palvanna Nathar Temple-Sivapuri

இறைவன் : பால்வண்ண நாதர்

இறைவி : வேதநாயகி

தலவிருச்சகம் : வில்வம்

தல தீர்த்தம் : கொள்ளிடம்

புராண பெயர் : திருக்கழிப்பாலை

ஊர் : சிவபுரி

மாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு

  • கொள்ளிடம் நதியின் வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் இவ் தல இறைவனின் தலம் இருந்தது .கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெல்ல பெருக்கால் இந்த கோயில் சேதம் அடைந்தபோது இவரை இவ் சிவபுரியில் உள்ள உச்சிநாதேசுரர் கோயில் அருகில் உள்ள புதிய ஆலயத்தில் உள்ளே பால்வண்ண நாதரை பிரதிஷ்டை செய்தார்கள்
Sri Palvanna Nathar Temple-Sivapuri
  • இத்தலத்தில் உள்ள இறைவன் வெண்ணிறமுடையவராக விளங்கியதால் இவரை பால்வண்ண நாதேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார் .
  • இக்கோயில் 274 தேவார பாடல் பெற்ற தலங்களில் 58 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற காவேரி பாடல் பெற்ற தலங்களில் 4 வது தலமாகும் .
  • இறைவன் இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்துக்குத்தான் பூஜைகள் நடக்கின்றன .
  • பைரவ கோயில் : இவ் பகுதி மக்களுக்கு பைரவ கோயில் என்று கேட்டால்தான் தெரியும் .அஷ்டமி அன்று அதிக மக்கள் கூட்டம் கூடும்.இங்குள்ள பைரவ காசியில் உள்ளது போல் நாய் வாகனம் இல்லாமல் 27 மண்டை ஓட்டுடன் ,பூணல் அணிந்து சர்பத்தை அரைஞான் அணிந்து ஜடாமுடியுடன்,சிங்கப்பல்லுடன் தனி சன்னதியில் அருளுகிறார் .
  • அகத்தியர் மற்றும் கபில முனிவர் தரிசனம் செய்த கோயிலாகும் .லிங்கத்தின் பின்புறம் இறைவன் தாயாருடன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார் .

திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 -11 .00 வரை ,மாலை 5 .00 -7 .15 வரை
ஆலய அர்ச்சகர் வீடு கோயில் அருகிலேயே உள்ளது ,அவரை தொடர்பு கொண்டு தரிசிக்கலாம் .phone : 9842624580

செல்லும் வழி:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வழியாக சுமார் 5 km சென்றால் சிவபுரி வரும் அங்கே உசிநாதசுரர் கோயிலுக்கு அருகில் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .

Location:

தென்னாடுடைய சிவனே போற்றி !எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *