Sri Nageswarar Temple (Raghu Sthalam)- Kundrathur (Chennai)

ஸ்ரீ நாகேஸ்வரர் கோயில் (ராகு தலம் )- குன்றத்தூர்

Sri Nageswarar Temple, Kundrathur
Main Entrance 

இறைவன் : நாகேஸ்வரர்

இறைவி : காமாச்சி

தீர்த்தம் : சூரிய புஷ்கரணி

தல விருச்சகம் : செண்பக மரம்

ஊர் : குன்றத்தூர் , வட நாகேஸ்வரம்

மாவட்டம் : காஞ்சிபுரம்

  • சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் இது ராகு தலமாகும் , ராகு தோஷம் உள்ளவர்கள் ஞாயிறு கிழமைகளில் இறைவனின் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தோஷத்தை நிவர்தி செய்து கொள்கிறார்கள் .
  • சேக்கிழார் பிறந்த ஊராகும் அவர் கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரரை அடிக்கடி சென்று தரிசிப்பார். தான் தினமும் தரிசம் பெறுவதெற்காக சோழ மன்னரிடம் சொல்லி இக்கோயிலை காட்டினார் .
  • இங்குள்ள மூலவர் சேக்கிழாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
  • இக்கோயிலை வட நாகேஸ்வரம் என்று அழைக்கிறார்கள்
  • ராகுவின் அம்சமான இந்த சிவனுக்கு நாக தோஷம் தீருவதிற்கு காலை 6 .30 மணி ,10 .00 மணி மற்றும் மாலை 5 .00 மணி நேரங்களில் அபிஷேகம் நடைபெறும் சமயத்தில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்

சேக்கிழார் :

சோழ மன்னன் அனபாயன் இப்பகுதியை ஆண்டபோது அவரது அரசபையில் சிவபத்தர் ஒருவர் இருந்தார் அவருடைய மகன் அருண்மொழிராமதேவர் இவரின் குலத்து பெயராக சேக்கிழார் என்று அழைக்கப்பட்டார் . இவர் சிறுவயதிலேயே புலமை பெற்று விளங்கிய இவரை மன்னன் தனது அமைச்சர் ஆக்கிக்கொண்டார் . சிறந்த சிவ பக்தரான சேக்கிழார் சிவ அருள் பெற்ற அறுபது மூன்று நாயன்மார்களை பற்றி தொகுத்து பெரியபுராணம் என்ற நூலை எழுதினார் .

அமைவிடம் :
போரூரில் இருந்து 10 km தொலைவிலும் ,பல்லாவரத்திலிருந்து 8 km தொலைவிலும் உள்ளது .

Location

1 Comment

Cancel reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *