Sri Manakula Vinayagar Temple – Pondicherry

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் – பாண்டிச்சேரி 

 

  • நான் இந்த india temple tour இணையதளத்தை தொடங்கியவுடன் முதலில் நான் எழுத நினைத்த கோயில் இதுவாகும். ஏனென்றால் நான் பாண்டி செல்லும்போதெல்லாம் இக்கோயிலுக்கு அதிகமாக சென்றதுண்டு அவ்வளவு சக்தி வாய்ந்த கோயிலாகும் .
  • இங்குள்ள விநாயகர் இருக்கும் பீடம் ஒரு கிணற்றின் மேல் உள்ளது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் .
  • இக்கோயிலுக்கு மட்டுமே விநாயகருக்கு பள்ளியறை உள்ளது வேறு எந்த ஒரு விநாயகர் கோவிலிலும் கிடையாது . பள்ளியறையில் அவரது அன்னையர் பார்வதி உள்ளார் . இரவு நைவேத்தியம் முடிந்ததும் அவர் பள்ளியறைக்கு செல்வார் அப்போது அவர் பாதம் மட்டுமே உள்ள உற்சவர் கொண்டு செல்லப்படுவார்.
  • இவ்வூரிலிருந்து யார் வெளியூர் சென்றாலும் இவரை வண்ணங்கிவிட்டுத்தான் செல்வர் .
  • இக் கோயிலுக்கு ஹிந்து பட்டும் அல்லாமல் கிருஸ்துவர்கள் , முஷ்லீம்கள் என அணைத்து மதத்தினரும் வந்து வணங்கி செல்கின்றனர் .
  • புது வாகனங்கள் இங்கு அதிக அளவில் பூஜை போடப்படுகின்றன .
  • இக்கோவிலின் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், கோவிலில் பிரம்மாண்டமாக தங்கரதம் மற்றும் வெள்ளி ரதம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் கோபுரம் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த முண்டாசுக் கவிஞர் பாரதி, இந்த விநாயகரை போற்றி நான்மணிமாலை என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாண்டிச்சேரி tour வருபவர்கள் கண்டிப்பாக இக்கோயிலை தரிசிக்க வேண்டும் அவ்வளவு சிறப்பான temple ஆகும் .

செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம்

பாண்டிச்சேரி கடற்கரை அருகிலேயே உள்ளது .
காலை 6 மணி முதல் 1 வரை ,மாலை 4 மணி முதல் இரவு 9 வரை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *