Sri Mahakaleswarar Temple – Irumbai

ஸ்ரீ மஹாகாளீஸ்வரர் கோயில் – இரும்பை

Sri Mahakaleeswarar Temple- Irumbai

இறைவன் : மஹாகாளீஸ்வரர்

இறைவி : குயில் மொழி நாயகி ,மதுர சுந்தர நாயகி

தல விருச்சம் : புன்னை

தீர்த்தம் : மாகாள தீர்த்தம்

ஊர் : இரும்பை

மாவட்டம் : விழுப்புரம்

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் 32 வது தலம். தேவார சிவத்தலங்களில் 276 இல் 265 வது தலமாகும் .

சிவதல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் , கருவரையில் இறைவன் லிங்க மேனி மூன்று பாகங்களாக பிளந்து ,மூன்று முகங்களுடன் இருக்கிறார் . இவ் மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தால் கட்டி வைத்து பூஜை செய்கிறார்கள் .இவ் முகங்கள் சிவன் ,பிரம்மா,விஷ்ணு ஆகிய மூன்று மூர்த்திகளாக இருப்பதாக கூறுகிறார்கள் .மகாகாளர் என்னும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது இவ் தலத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார் .

மகாகாளரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவனுக்கு மகாகாளநாதர் என்ற பெயர் ஏற்பட்டது .

தல வரலாறு : கருவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரச மரத்தின் அடியில் சிவனை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தார் ,

அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யவில்லை அதனால் மக்கள் வறுமையில் வாடினார்கள் ,மழை இல்லாமல் பயிர்கள் வாடுவதை கண்டா இந்நாட்டு சிற்றரசர் கடுவெளி சித்தரின் கடும் தவமே இதற்க்கு காரணம் என்று எண்ணி அவரின் தவத்தை கலைக்க ஒரு தேவதாசியை அனுப்பிவைத்தார் .அவளும் அவரின் தவத்தை கலைத்தாள். அவர் தவம் கலைந்து எழுந்தவுடன் அரசர் நடந்தவைகளை அனைத்தையும் சித்தரிடம் கூறி தன்னை மன்னிக்குமாறு கூறினார் .சித்தர் அவரை மன்னித்து தன் தவத்தை கலைத்தார் .பின்பு இங்கயே தங்கி சிவப்பணிகளை செய்து வந்தார் . ஆதலால் நல்ல மழை பெய்தது ,மக்கள் வறுமை நீங்கி நல்ல வளத்தை பெற்றார்கள் . மக்கள் இங்குள்ள சிவனுக்கு திருவிழா நடத்தினார்கள் ,அவ் விழாவின் ஊர்வதில் தேவதாசி ஸ்வாமியின் ஊர்வலத்தின் முன் நடனமாடி சென்றாள். அப்போது அவள் காலில் அணிந்திருந்த சிலம்பு கழன்று விழுந்தது . இதை பார்த்த சித்தர் திருவிழாவில் நடனம் மற்றும் கொண்டாட்டங்கள் தடை படக்கூடாது என்று எண்ணி அவ் சலங்கையை கையில் எடுத்து அவளுக்கு அணிவித்தார் ,இதனை கண்ட ஊர் மக்கள் அவரின் செய்கையை எண்ணி ஏளனமாக சிரித்தனர் ,இதனால் கடும் கோபம் கொண்ட சித்தர் சிவனை நோக்கி பாடினார் . இதனால் கோயிலின் உள் உள்ள மூலலிங்கம் மூன்று பகுதிகளாக வெடித்து சிதறியது .இதனை அறிந்த அரசர் சித்தரிடம் மன்னிப்பு கேட்டார் .சித்தர் மீண்டும் பாட , சிதறிய பாகங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன .சிவலிங்கத்தை  செப்புத் தகடு வேய்ந்து ஒன்றாக்கி அரசன் வழிபட்டான் ,இன்று வரை இறைவன் செப்பு தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி தருகிறார் .

கோயில் கருவறை முன்சுவர் முழுவதும் செப்பு தகட்டால் வேயப்பட்டு தங்க முலாம் பூசியது போல் பளபளப்புடன் இருக்கிறது .துவாரகபாலகர் மற்றும் மகாளர் உருவம் ஆகியவை செப்பு தகட்டால் மேயப்பட்டிருக்கிறது.

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 .00 -12 .00 , மாலை 04 .00 -08 .00 வரை

தொடர்பு எண்: 0413 – 2688943 , 9843526601

அமைவிடம் :

பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 10 km தொலைவில் திண்டிவனம் சாலையில் உள்ளது . திண்டிவனத்திலிருந்து கிளியனூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் வழியில் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டை தாண்டி சிறிது தூரம் சென்றால் இரும்பை செல்லும் சாலை பிரிகிறது  . இவ் சாலையில்  2 km தொலைவில் இவ் பதி அமைந்துள்ளது . இவ் கோயிலின் அருகில் சுமார் 5 km தொலைவில் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருஅரசிலி உள்ளது .

This is one of the 276 Devara Paadal Petra Shiva Sthalams and 32nd Shiva Sthalam in Thondai Nadu.Lord Shiva in this temple is a Swayambumurthi.This is one of the three places where the Shiva Lingam is said to have been installed and worshipped by Mahakala Rishi.It is believed that this temple was built in the 7th century by Chola King Kulothungan III.

Location :

ஓம் நமசிவாய !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *