Sri Maganathar- Lalithambigai temple- Thirumeeyachur

ஸ்ரீ மேகநாதர் – ஸ்ரீ லலிதாம்பிகை கோயில் – திருமீயச்சூர்

Sri Maganathar- Lalithambigai temple- Tirumeeyachur

மூலவர் : மேகநாதசுவாமி

   உற்சவர் : பஞ்சமூர்த்தி

   அம்மன்/தாயார் : லலிதாம்பிகை, சவுந்திரநாயகி

   தல விருட்சம் : மந்தாரை, வில்வம்

   தீர்த்தம் : சூரியபுஷ்கரிணி

   ஊர் : திருமீயச்சூர்

   மாவட்டம் : திருவாரூர்

   மாநிலம் : தமிழ்நாடு

  • தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 56 வது தலம் இதுவாகும் . தேவார பாடல்பெற்ற சிவத்தலங்களில் 119 வது தலமாகும் . இது சோழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும் .
Sri Maganathar- Lalithambigai temple- Tirumeeyachur
  • இங்கே, ஸ்ரீசதாசிவ லிங்க பீடத்தில், ஸ்ரீசக்ரத்தில் நின்றபடி, அகில உலகையும் ஆட்சி செய்கிறாள், ஸ்ரீலலிதாம்பிகை.உலகின் எல்லா இடங்களில் இருந்தும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, அவளை அனுதினமும் மனமுருகிப் பிரார்த்திப்பவர்கள் மிக மிக அதிகம்! அதனைப் பாராயணம் செய்தாலே, மன பாரமெல்லாம் போய்விடும். அப்பேர்ப்பட்ட, சக்தியும் சாந்நித்யமும் கொண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம், திருமீயச்சூர்.
  • இங்கு மூலவர் மேகநாதர். சுவாமி சுயம்புலிங்கமாக உள்ளார். இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.  சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்டையில் இத்தலம் “மீயச்சூர்’ என அழைக்கப்படுகிறது.
    ஸ்ரீசக்ர நாயகி: மூலவர் மேகநாதர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி அருளுகிறார் அம்மன் லலிதாம்பிகை. இவளுக்கு சவுந்தரநாயகி என்ற திருநாமமும்  உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. இளங்கோவில் சன்னிதானத்திலுள்ள இறைவனின் திருநாமம் சகலபுவனேஸ்வர். இவர்   மேகலாம்பாளுடன் அருள் செய்கிறார்.சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.
  •  வரலாறு : பண்டாசுரன் எனும் அரக்கனால், துன்பங்களுக்கு ஆளான தேவர்கள், ஈசனின் திருவடியைச் சரணடைந்து கதறினர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஸ்ரீலலிதையாக அவதரிக்கச் செய்தார் ஈசன். கடும் உக்கிரத்துடன் தோன்றிய ஸ்ரீலலிதை, சகஸ்ர கோடி வருடங்கள், அரக்கனுடன் யுத்தம் செய்தாள். இறுதியில் அவனை அழித்தாள் ஆனாலும் அவளது உக்கிரம் தணியவில்லை.இந்தக் கோபம், பூமிக்கும் மக்களுக்கும் நல்லதல்ல’ என்பதால், ‘ஸ்ரீபுரத்தில் தவம் செய்தால், உனது உக்கிரம் தணியும்’ என அருளினார் சிவபெருமான். இதையடுத்து ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு வந்தாள். அங்கே கடும் தவம் புரிந்தாள். அவளுக்குள்ளிருந்து ‘வாக் தேவதைகள்’ எட்டுப்பேர் வெளிவந்தனர். ஸ்ரீலலிதையைச் சுற்றி வட்டமாக நின்றனர். ஸ்ரீலலிதையின் கூந்தல், கண்கள், கன்னம், நெற்றி, திருப்பாதம் என அவளது அழகை வியந்து, பாடினர்.எட்டுத் தேவதைகளும் அந்த ஸ்தோத்திரத்தைப் பாடப்பாட… அவளது உக்கிரம் காணாமல் போனது. அவளுக்குள் சாந்தமும் கருணையும் பொங்கிப் பிரவாகித்தன! அதே தலத்தில் இருந்தபடி, அன்பர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுளம் கொண்டாள்.
    அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, “வசின்யாதி வாக் தேவதைகள்’ என்பவர்களை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே “ஸ்ரீ மாத்ரே’ என துவங்கும் “லலிதா சகஸ்ரநாமம்’ ஆயிற்று.
  • கிளியுடன் துர்க்கை: மதுரையில் மீனாட்சிக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் கிளி உண்டு. இவை கூட அலங்காரத்துக்காக செய்து வைக்கப்படுபவை தான். சிலையில் கிளி கிடையாது. ஆனால், துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது ஒரு சில கோயில்களில் தான்.”சுகம்’ என்றால் “கிளி’. இவள் மகிஷாசுரன் மீது நின்றாலும் சாந்த சொரூபிணியாக திகழ்கிறாள். இந்தக் கிளி பக்தர்களின் கோரிக்கையை துர்க்கை மூலமாக லலிதாம்பிகையிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்குமாம். “சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை’ என்ற சுலவடை கூட இதில் இருந்து தான் பிறந்தது. இன்றும் கூட தினமும் மாலை வேளையில் மட்டும் ஒரு கிளி துர்க்கா சன்னதியில் இருந்து லலிதாம்பிகை சன்னதிக்கு சென்று  வருவதைக் காணலாம்.
  •  ஹயக்கிரீவர்  இவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையைப் பற்றி விவரித்தார். இதைக்கேட்ட அகத்தியர்,”லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும்?”என கேட்டார். அதற்கு ஹயக்கிரீவர்,” “பூலோகத்தில் அம்பாள்  வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும்,”என்றார். அகத்தியர் தன் மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர்,“லலிதா நவரத்தின மாலை‘ என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.
  • இரண்டு லிங்கம்: இக்கோயிலில் இரண்டு சிவன் சன்னதிகள் உள்ளன. இங்கே லிங்கவடிவில் சிவன் காட்சி தருகிறார். ராஜ கோபுரத்தின் நேர் உள்ள சன்னதியில் உள்ள சிவனை திருஞான சம்பந்தரும், வடக்கு பிரகாரத்தில் உள்ள இளங்கோவில் சிவனை அப்பரும் பாடியுள்ளனர். அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் தலம், தேவாரப் பாடல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். பிரண்டை சாத நைவேத்தியம் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் சங்கு தோன்றுவதால் அதற்கு ஆயுளை காக்கும் தெய்வீக தி உண்டு என்பார்கள்.சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், இத்தல இறைவனை நீண்ட ஆயுளைத்தரக்கூடிய 1008 சங்குகளால் அபிஷேகம் செய்து, எமலோகத்தின் தல விருட்சமும் சக்தி வாய்ந்ததுமான பிரண்டை என்னும் தாவரம்(கொடி வகையைச் சார்ந்தது) கலந்த அன்னத்தை மேகநாத சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபட்டான்.
  • கொலுசு காணிக்கை:  இங்குள்ள லலிதாம்பிகை சகல ஆபரணங்களையும் அணிந்து பட்டத்தரசியாக ஜொலித்தாலும், காலில் கொலுசு அணியாமல் அலங்காரம் செய்து வந்தனர். ஒருமுறை அம்பாளின் பக்தை ஒருவரின் கனவில் அம்பாளுக்கு கொலுசு மாட்டுவது போன்ற காட்சி வந்ததாம். அதன்படி பக்தை அம்பாளுக்கு கொலுசு செய்து அணிவித்தார். தற்போது பக்தர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள்.
  •  க்ஷேத்திர புராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அற்புதமானது.சாபத்தின் கடுமையால் சீக்கிரம் விமோசனம் வேண்டி சூரியன் அலறிய குரல், ஏகாந்தமாய் இருந்த அம்பாளுக்கு பாதிப்பை உண்டாக்கியது. அதனால் கோபமடைந்து, சூரியனை சபிக்கத் திருப்புகிறாள். சுவாமி அம்பாளின் முகவாயைப் பிடித்து நான் ஏற்கனவே கொடுத்த சாபத்தினால் இவ்வுலகம் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. நீயும் சபிக்காதே என்றார். இதிலுள்ள அம்மனின் முகத்தை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும், இடதுபுறமிருந்து பார்த்தால் சாந்தமாக இருப்பதை போலவும் தெரியும்.
  • அன்னப்பாவாடை மகா நைவேத்தியம் : சிறப்பு வாய்ந்த ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மாசி மாத அஷ்டமி நவமி இணைந்த நாளில் ஆதி சைவ சிவாச்சார்யர்களும் அன்னையின் பக்தர்களும் அம்பாள் உபாசகர்களும் கூடி இணைந்து ஏகதின லட்சார்ச்சனை மற்றும் ஹோமம் பள்ளயம் எனப்படும் அன்னப்பாவாடை மகா நைவேத்தியம் போன்ற வழிபாடுகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர் .லட்சார்ச்சனையின் போது 10 காலத்திற்கும் 10 விதமான பிரசாதங்கள் காலம் ஒன்றிற்கு 10 கிலோ வீதம் 100 கிலோ பிரசாதம் நைவைத்தியம் செய்யப்படுகின்றது. உச்சிகாலத்தில் விசேஷமாக பிரண்டை சாதம் 10 கிலோ நைவேத்தியம் செய்யப்படுகின்றது.அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் 50 கிலோ சர்க்கரை பொங்கல், 50 கிலோ புளியோதரை மற்றும் 50 கிலோ தயிர் சாதம் படைக்கப்படும் மற்றும் பஞ்ச பட்சணங்களான அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும்.சர்க்கரை பொங்கலில் நெய் ஊற்றி நெய்க்குளம் உருவாக்கி அதில் அம்பாளின் பிம்பத்தை விழ வைத்து தரிசனம் செய்து வைக்கப்படும்.இந்த அற்புத காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து கண்டுகளிக்கின்றனர் .

Photos :

https://alayamtrails.blogspot.com/2022/03/sri-maganathar-lalithambigai-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 .00 -12 .30 வரை மாலை 4 .30 -8 .30 வரை
தொலைபேசி எண்:  04366-239 170, 94448 36526.

செல்லும் வழி:

மாயவரத்தில் இருந்து சுமார் 18 km உள்ள பேரளம் சென்று அங்கிருந்து 2 km தொலைவில் திருமீச்சூர் அடையலாம் . பேரளம் வரை பேருந்து வசதிகள் அதிகம் உள்ளன .அங்கிருந்து ஆட்டோவில் இக்கோயிலுக்கு செல்லலாம் 

Location:

ஓம் நமசிவாய !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *