Sri Lakshmi Narasimha Temple-Ponvilaintha kalathur

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் – பொன்விளைந்த களத்தூர்

Sri Lakshmi Narasimha Temple- Pon vilaintha kalathur

இறைவன் : வைகுண்டவாச பெருமாள்

தாயார் : அஹோபில வள்ளி தாயார்

உற்சவர் : லட்சுமி நரசிம்மர்

ஊர் : பொன்விளைந்த களத்தூர்

மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு

Sri Lakshmi Narasimha Temple- Pon vilaintha kalathur
  • அழகிய கிராமத்தில் அமைந்துள்ள மிக பழமையான கோயில் ,இக்கோயின் அருகில் கோதண்டராமர் கோயிலும் உள்ளது .
  • இக்கோயிலுக்கும் மாமல்லபுரம் திரு கடல்மலை திவ்யதேசத்திற்கும் ஒரு சம்பந்தம் உண்டு ,அது என்னவென்றால் இக்கோயிலில் உள்ள நரசிம்மர் உற்சவ மூர்த்தி மாமல்லபுரத்தில் இருந்து வந்ததாகும் ,எப்படி என்றால் கடல்மலை திவ்யதேசத்தில் நிறைய உற்சவ மூர்த்திகள் இருந்தன அவைகளை கடல் பெருக்கினாள் அடித்து செல்லப்பட்டன அவைகளில் ஒன்றான இந்த நரசிம்மர் உற்சவரை காப்பாற்ற கருட பெருமான் அவர்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது ,அதென்படி கருடன் பறந்து சென்று பாதுகாப்பான இடத்தை தேடி அலைந்து இவ்விடத்திற்கு வந்து இக்கோயில் மேல் வட்டம் அடித்தது ,இதுவே பாதுகாப்பான இடம் என்று அறிந்து உற்சவரை இங்கு நிறுவினார்கள் . அதர்க்கு முன் இங்கே வைகுண்டவாச பெருமாள் வீற்றியிருந்தார் . இக்கோயில் 900 வருடங்கள் முற்பட்ட கோயிலாகும் .
  • இவூருக்கு வேதாந்த தேசிகர் திருவதிகைக்கு போகும் வழியில் வந்து இக்கோயிலில் தாங்கினார் அவர் இரவு நேரத்தில் ஹயகிரிவருக்கு பிரசாதம் சமர்ப்பிக்க உணவு கேட்டார் ஆனால் ஊர்மக்கள் கொடுக்க மறுத்துவிட்டனர் அவர் இறைவனுக்கு தீர்த்தத்தை படைத்துவிட்டு படுக்கவைத்தார், அன்று இரவு ஒரு வெள்ளை குதிரை கிராமத்தில் உள்ள எல்லா நெல் வயல்களையும் புகுந்து நாசம் செய்தது கிராம மக்கள் அதைக்கண்டு அச்சமுற்று தேசிகரிடம் வினவினர் அதைக்கேட்ட அவர் அவர்களுடன் வயல்வெளிகளை காண சென்றார் அப்போது ஆச்சரியானான் நிகழ்வு நடந்தது அதாவது வயல்வெளிகளில் உள்ள எல்லா நெல்களும் தங்கங்களாக மாறியிருந்தது ,ஊர் மக்கள் தன தவறை உணர்ந்தனர் ,தேசிகரும் புரிந்தது இவ் திருவிளையாடலை ஸ்வாமி ஹயகிரிவரே நடத்தியுள்ளார் என்று . இவ் நிகழ்வே இவூருக்கு பொன்விளைந்த களத்தூர் என்ற பெயர் ஏற்பட காரணமாகும் .
Sri Lakshmi Narasimha Temple- Pon vilaintha kalathur

செல்லும் வழி:
செங்கல்பட்டிலிருந்து சுமார் 10 km தொலைவில் உள்ளது. நிறைய பேருந்துகள் உள்ளன ,மற்றும் ஒட்டிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து அருகில் இவூர் அமைந்துள்ளது .

திறந்திருக்கும் நேரம் :
காலை 8 -11 மாலை 5 -7 .30

Location Map:

2 Comments

Cancel reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *