Sri Lakshmi Narasimha Temple- Antarvedi

 ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் -அந்தர்வேதி

Sri Lakshmi Narasimha Temple- Antarvedi
  • தஷ்ணகாசி என்று அழைக்கப்படும் தலம். இவ் திருத்தலம் வங்காள விரிகுடா மற்றும் வசிஷ்ட கோதாவரி மற்றும் கோதாவரி நதி இவைகள் இணையும் முக்கோண சங்கமத்தில் இவ் திவ்ய தேசம் உள்ளது .
  • இக்கோயிலுக்கு செல்லும் வழியெங்கும் தென்னை மரங்களும் அழகிய கடல் மற்றும் ஆற்று படுக்கைகளில் நல்ல விளைச்சலோடு மிகவும் பசுமையாக இருக்கிறது .
  • 15 மற்றும் 16  ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும் .பீட்டாபுரம் மஹாராஜாவால் 18 நூற்றாண்டில் இக்கோயிலை எடுத்து நிர்வகித்தார்கள் . இது 1666 ஆண்டு வருடத்தை சார்ந்த கோயிலாகும் .
  • லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு முன்னர் இவ்விடத்தில் சிவன் கோயில் இருந்ததாகவும் இப்பொது அவரே இக்கோயில் க்ஷேத்ர பாலகராக உள்ளார்  என்றும் கூறப்படுகிறது
  • வரலாறு : சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்ட மகரிஷி தன்னுடைய மனைவி அருந்ததியுடன் கோதாவரி நதியின் கிளை  நதியான கௌதமி நதியின் கரையில் ஆசிரமம் அமைத்து அங்கேயே தங்கி யாகங்கள் மற்றும் வேள்விகளை நடத்திக்கொண்டிருந்தார் .அதே சமயம் ஹரியாக்ஷ என்ற அசுரன் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து வரங்களை பெற்றான் ,தான் பெட்ரா வரங்களை கொண்டு ரிஷிகளை குழந்தைகளை துன்புறுத்தி கொன்று குவித்தான் ,வசிஷ்ட முனிவர் இறைவன் விஷ்ணுவிடம் தன வேண்டுதலை கூறினார் .இறைவன் நரசிம்மராக வந்து அசுரனிடம் போர் புரிந்தார் .போரில் அவன் கிழே விழும்போது அவன் ரத்தம் மணலில் சிந்தியவுடன் அவைகள் பல அசுரர்களாக உருப்பெற்றன . இறைவன் இதை கவனித்து சகோதரி அஸ்வத்  ருத்ராம்பிகா வை அழைத்து காரணத்தை கேட்டார் அவள் இறைவினிடம் இரத்தத்தை நிலத்தில் விழாமல் இருக்கவேண்டும் என்று கூறினாள்,அவள் தன் நாக்கை போர் நடக்கும் இடத்தில நீட்டினாள் ,இறைவன் அசுரனை அழிக்கும்போது வெளிவந்த ரத்தத்தை தன் நாக்கின் மூலம் உறிஞ்சிக்கொண்டாள் அதனால் அசுரன் அழிந்தான் ,அந்த ரத்தங்களை வசிஷ்ட கோதாவரியில் இறக்கிவிட்டாள்,இப்போது அந்த ஆறு ரத்த துளி ஆறு என்று அழைக்கப்படுகிறது .இப்போதும் இந்த நதியானது சிறு நதியாக கோயிலை நோக்கி செல்கிறது .
  • நரசிம்மர் சன்னதியில் அவரின் காலுக்கு கிழே ஆதி கூர்மர் உள்ளார் ,இவர் இங்கே உள்ள ரத்த துளி ஆற்றில் சுயம்புவாக கிடைத்தார் . இவருக்கும் தினமும் அபிஷேகம் நடைபெறுகிறது .  
  • ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் ஸ்வாமி : இக்கோயிலில் உள்ள நீலகண்டேஸ்வரர் ஸ்வாமி பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது ,கிரிதாயுகத்தில் ருத்ர யாகம் செய்ய ஏதுவான இடங்களில் பிரம்மா அவர்கள் நீலகண்டேஸ்வரரை பிரதிஷ்டை செய்து யாகங்களை செய்தார் . இக்கோயிலில் இறைவன் க்ஷேத்ர பாலகனாக இருக்கிறார் .
  • திரேதாயுகத்தில் ராவணனை கொன்று சீதா தேவியுடன் ஸ்ரீராமர் திரும்பி வருகையில் இக்கோயிலில் உள்ள நீலகண்டேஸ்வரரை வணங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது .
  • ஒவ்வொரு வருடத்திலும் வரும் ரததசமியை தொடர்ந்து வரும் 10 நாட்களிலும் சூரிய கதிர்கள் இக்கோயிலின் மூலவர் மீது விழும் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-lakshmi-narasimha-temple-antarvedi.html

  • Lakshmi Narasimha Temple is situated in temple town named Antarvedi of Sakhinetipalle Mandal, located in the East Godavari district of the Andhra Pradesh state in India. The temple is situated at the place where the Bay of Bengal and Vashista Godavari, a tributary of the Godavari River, meet. It was built in the 15th and 16th centuries. This is 32 kshetra of 108 Narashima kshetrams.

 Attractions

  • Island temple of Sri Lakshmi Narsimha Swamy, facing west
  • Lord Neela kantheswara Temple
  • Sri Rama, Anjaneya and Venugopala shrines
  • Vasishta temple
  • Vasishta Godavari river meeting Bay of Bengal
  • Boating to an Island on the other side of Gadavari holy both at saptha sagara sangamam.

How To Reach

Distance From: Visakhapatnam – 265 km, Vijayawada – 160 km, Kakinada – 114 km, Rajamundry – 96 km,Amalapuram-65 Km

Opening Time:

Morning 6.00Am-12.00 PM, Evening 1.30 PM-7.30 PM

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *