Sri Kothandaramar Temple-Unamancheri(Chennai)

ஸ்ரீ கோதண்டராமர் கோயில் – ஊனமாஞ்சேரி (சென்னை )

Sri Kthandaramar Temple- Unamancheri

இறைவன் : கோதண்டராமர்

தாயார் : சீதாலட்சுமி தாயார்

ஊர் : ஊனமாஞ்சேரி ,சென்னை

புராண பெயர் : ஊனம் மாய்க்கும் சோலை

மாவட்டம் : காஞ்சிபுரம்

  • 1300 வருடங்களுக்கு முற்பட்ட கோயில் , சுமார் கி. பி 847 ஆண்டு கற்பகரம் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது .
  • விஜயநகர அரசரின் தம்பி அச்சுத பல்லவ மஹாராஜர் தன் ஊனத்தை போக்க கனவில் தோன்றிய ராமர் இக்கோயிலுக்கு வந்து புஸ்கரணியில் நீராடி தன்னை வணங்கினால் ஊனத்தில் இருந்து விடுபடலாம் என்று கூறி மறைந்தார் அதன்படி அவர் இக்கோயிலுக்கு வந்து கைங்கரியம் செய்தார் ,அவர் கட்டியதே இப்போதுள்ள அர்த்தமண்டபம் ,மகாமண்டபம் மற்றும் கருட மண்டபம் ஆகியவைகளாகும் . ஆதலால் இக்கோயிலுக்கு ‘ஊனம் மாய்க்கும் சோலை‘ என்ற பெயர் உண்டு .
  • இவ் கோயிலில் ஸ்ரீராமர் ,சீதாதேவி ,லக்ஷ்மணர் ,பரதர்,சத்ருகன் மற்றும் முன்னும் பின்னும் முகம் உள்ள ஆஞ்சநேயர் ஆகியோர் கற்பகரகத்தில் உள்ளனர் ,பட்டாபிஷக கோலம் .ராமரே பார்த்துக்கொண்டு பின்னாடியே ஆஞ்சநேயர் நடந்ததால் ராமர் அவரிடம் உன் முகத்தை பார்க்க பக்தர்கள் விரும்புகிறார்கள் என்று கூற அவர் பின் புறத்திலும் முகத்தை கொண்டுள்ளார் .
  • எல்லா கோயில்களிலும் கர்பகிரகத்தின் உள்ளே நுழையும் நுழைவாயில் முன் மேலே கஜலக்ஷ்மி சிற்பமே இருக்கும் ஆனால் இங்கு நுழைவாயிலில் ரங்கநாதர் பஞ்ச மஹரிஷிகளுடன் உள்ள அரிதான சிற்பம் அமைந்துள்ளது .
  • கோயிலின் சுவற்றில் விஜயநகர பேரரசரின் முத்திரையான வராகன் ,பட்டாரி மற்றும் சந்திரன் ,சூரியன் முத்திரை செதுக்கப்பட்டுள்ளது .
  • ஊனம் உற்றோர்கள் ,குழந்தை இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து பரிகார நிவர்த்தி செய்துகொள்ளலாம் .

Photos

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-kothandaramar-temple.html

செல்லும் வழி
வணடலூர் வனவிலங்கு பூங்காவுக்கு அருகில் மேடவாக்கம் போகும் சாலையில் 4 1 /2 கி. மீ தொலைவில் வலது புறத்தில் சென்றால் இக்கோயிலை அடையலாம் . காலை 7 மணிக்கு மேல் சென்றால் இக்கோயில் திறந்திருக்கும் .

Location :

அருகில் உள்ள கோயில் :
1 . லட்சுமி குபேர கோயில்- ரத்னமங்கலம்

  • கடந்த ஸ்ரீராமநவமி தினத்தன்று எனக்கு செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் பகுதியில் உள்ள மிக பழமையான ஸ்ரீ ராமர் கோயில்களை ஒரே நாளில் கண்டு கண்குளிரும் மிகப்பெரிய பாக்கியம் கிடைத்தது , இவ் அருமையான தருணத்தை தந்து உதவிய சஞ்சய் டூரிஸ்ட் க்கு மிக்க நன்றி .

நான் கண்டு தரிசித்த கோயில்களை வரும் பதிவுகளில் ஒன்றன் பின் ஒன்றாக என் பதிவுகளில் நீங்கள் தரிசிக்கலாம் ,

1 . கோதண்டராமர் கோயில் – ஊனமாஞ்சேரி
2 . கோதண்டராமசாமி கோயில் – செங்கல்பட்டு
3 . தர்பசயன சேதுராமன்-கோதண்டராமர் கோயில் – பொன்விளைந்த களத்தூர்
4 . லட்சுமி நரசிம்மர் கோயில் – பொன்விளைந்த களத்தூர்
5 . சதுர்புஜ ராமர் – பொன்பாதர்கூடம்
6 . ஸ்ரீ வேதநாராயண பெருமாள் – அன்னூர்
7 . ஸ்ரீ வரதராஜ பெருமாள்-சுந்தர மஹாலக்ஷ்மி கோயில் – அரசர்கோயில்
8 . பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் -திருமலைவையாவூர் (தென் திருப்பதி )
9 . கீர்த்திநாராயணர் பெருமாள் கோயில் -பிலாப்பூர்

மற்றும் இவ் பகுதியை சேர்ந்த பழம்பெரும் சிவன் கோயில்கள்

1 . முன்குடுமீஸ்வரர் கோயில் – பொன்விளைந்த களத்தூர்
2 .அர்த்தபுரீஸ்வரர் கோயில் – அன்னூர்

2 Comments

Cancel reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *