Sri Koorathazhwan Temple- kooram

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் -கூரத்தாழ்வான் அவதார தலம்-கூரம்

Sri Koorathazhwan Temple-Kooram
Sri Koorathazhwan

இறைவன் : ஆதிகேசவ பெருமாள்

அம்பாள் : பங்கஜவல்லி தாயார்

அவதார புருஷர் : ஸ்ரீ கூரத்தாழ்வான்

அம்சம்: ஸ்ரீ வத்சம்

மனைவி : ஆண்டாள்

நட்சத்திரம் : ஹஸ்தம்

மாதம் : தை மாதம்

வருடம் : கி.பி 1010 ,தமிழ் வருடம் சௌம்யா வருடம்

ஊர் : கூரம்

மாவட்டம் : காஞ்சிபுரம்

Sri Koorathazhwan Temple-Kooram

கூரத்தாழ்வான் ராமா பிரானின் அவதாரமாக இவ்ப்பூலோகத்தில் அவதரித்தார் அவருக்கு தமிழில் ‘திருமறுமார்பன்’ என்றும் ‘ஸ்ரீவத்சாங்கமிச்ரர்‘ என்று சமஸ்கரத்திலும் இவர் திருநாமம் வழங்கப்பட்டது . பெரிய செல்வந்தரான இவர் தினமும் 1000 மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் செய்துவந்தார் .

அவருடைய எல்லா சொத்துக்களையும் பெருமாளின் மீது உள்ள பக்தியால் எல்லாவற்றையும் தானமாக வழங்கினார்

ராம அவதாரமான கூரத்தாழ்வான் லக்ஷ்மணன் அவதாரமாக ஸ்ரீ ராமானுஜரை நண்பராக ஏற்று இருவரும் பெருமாளின் பெருமைகளை உலகுக்கு பரப்பிவந்தனர் .

சைவமதம் அதிகமாக தாக்கம் இருந்தகாலத்தில் ராமானுஜர் எல்லா இடங்களிலும் வைணவ மதத்தை பரப்பிக்கொண்டு இருந்தார் ,இதை அறிந்த சோழ அரசர் இதை எப்படியாவது தடுக்க நினைத்தார் அவருடைய ஆச்சாரியார் ஒட்டக்கூத்தர் ஏற்கனவே ராமானுஜரை பிடிக்காத காரணத்தால் அரசரிடம் வைணவர்களை சைவர்களாக மாற்ற கூறினார் ,வைணவர்கள் அதிகமாக போற்றும் ராமானுஜரை தன் இடத்துக்கு அழைத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டால் எல்லாருக்கும் மாறிவிடுவார்கள் என்று எண்ணி காவலர்களை அழைத்து அவரை அழைத்து வர சொன்னார். இதை அறிந்த சிஷ்யர்கள் ராமானுஜரை காப்பாற்ற எண்ணி அவரை ஸ்ரீரங்கம் அனுப்பிவைத்தனர் . கூரத்தாழ்வான் காவேரி கரையில் அவரை போல் உடையணிந்து நின்றிருந்தார் காவலர்கள் அவரிடம் இங்கு யார் ராமானுஜம் என்று கேட்க தனக்கு அரசனால் ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும் தான் தான் ராமானுஜர் என்று கூறினார் . அரசபைக்கு கூரத்தாழ்வாரும் ,பெரிய நம்பியும் வந்தனர் ,அரசர் அவரிடம் பத்திரத்தில் “சிவனே சிறந்த தெய்வம் “என்று எழுதி கையெழுத்து இட சொன்னார் , ஆனால் அவர் இதெற்கு ஆதாரம் கேட்டார் கோபம் உற்ற அரசர் அவரின் கண்களை பிடுங்க சொன்னார் உடனே அவர் உன்னை போல் அரசரின் கைகளால் தண்டனை பெறுவதெற்கு நானே என் கண்களை எடுத்துக்கொள்கிறேன் என்று தன் கண்களை தானே பிடுங்கிவிட்டார் அப்போது அங்கு இருந்த ஒருவர் இவர் ராமானுஜர் இல்லை என்று கூறினார் . 13 வருடங்கள் கண்கள் இல்லாமல் வாழ்ந்தார் பின்பு ராமானுஜர் அவரை சந்தித்து அவருக்காக இறைவனிடம் வேண்டி இறைவன் அவருக்கு கண்கள் தந்ததாக வரலாறு கூறுகிறது .

கூரத்தாழ்வான் மிகவும் மென்மனயான இரக்ககுணம் உள்ளவர் மற்றும் அவர் ஒழுக்கத்துடன் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார் .

“கண்கள் “ தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு சென்று இவரை தரிசித்தால் கண் சம்பந்தமான நோய்கள் குணம் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது .

அவருடைய ஹஸ்தம் நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் மிக சிறப்பாக நடைபெறுகிறது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-koorathazhwan-temple-kooram.html

Sri Koorathazhwan Temple-Kooram
Ten Comments

அமைவிடம்
காஞ்சிபுரத்திலிருந்து 15 km தொலைவில் உள்ளது.காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் வழியில் சென்றால் சுமார் 6 km தொலைவில் இடது புறத்தில் ரயில்வே கேட் தாண்டி 7 km தொலைவில் மிக ரம்மியமான இயற்கை வயல்வெளிகளுக்கு இடையே சிறிய அழகான கிராமம் இந்த “கூரம்” தளம் .

2 Comments

Cancel reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *