Sri Kolanjiappar Temple- Virudhachalam

கொளஞ்சி அப்பர் கோவில் (முருகன் )—
விருத்தாச்சலம்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

Sri Kolanjiyapar Temple-Virudhachalam
Moolavar Sri Kolanjiyappar

மூலவர் : கொளஞ்சியப்பர்

தலவிருச்சகம் : கொளஞ்சிமரம்

தீர்த்தம் :மணிமுத்தாறு

பழமை : 1000 வருடங்கள்

ஊர் : மணவாளநல்லூர் , விருத்தாசலம்

மாவட்டம் : கடலூர்

வரும் கந்தசஷ்டி விரதம் முன்னர் இந்த கந்தனை பற்றி எழுத எனக்குள் உந்துதலை என் கருணை வடிவான கந்தன் ஏற்படுத்தியதை நான் என்னவென்று சொல்லுவேன்

தல பெருமை :
நடு நாட்டு திருத்தலங்களில் ஒன்றான ‘திருமுதுகுன்றம் ‘என்னும் விருதாச்சலத்திற்கு அருகில் கடும் பூவும் நிறைந்த புள்ளினங்கள், வண்டினங்களும் இசைபாடும் இதைமணம் நிறைந்த மணவாளநல்லூர் என்னும் சிற்றூர் உள்ளது .’குரங்கு உலாவும் குன்றுறை மணவாள ‘என்று அருணகிரிநாதர் அருளியதால் கந்தன் எழுந்தருளிய காரணத்தால் மணவாளநல்லூர் என்று அழைக்க படுகிறது .

சுயம்புவாக கொளஞ்சியப்பன் :
தந்தையை போல் தானும் அருவுருவமாய் காட்சி தரும் தலம் மணவாளநல்லூர் .ஒரு காலத்தில் கொளஞ்சி மரங்கள் அதிகமாக இருந்த பகுதி ,ஒரு சமயம் சில சிறுவர்கள் பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டி வந்தபோது ஒரு பசு மட்டும் தினமும் ஒரு புதருக்குள் ஆடாமல் அசையாமல் நிற்பதை கவனித்த சிறுவர்கள் அந்த இடத்தை சென்று பார்க்கும்போது பசு அங்கு இருந்த ஒரு கருங்கல் பீடத்துக்கு தானாகவே பால் சொரிவதை கவனித்தனர் . உடனே அவர்கள் ஊர் பெரியவர்களிடம் தெரிவிக்க அவர்கள் அந்த சுயம்புவாக தோன்றிய இடத்தில் கோவில் எழுப்பி வழிபட தொடங்கினர் .கொளஞ்சி வனத்தில் தோன்றியதால் ‘கொளஞ்சியப்பர் ‘என்ற திருப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டார் .

திருத்தல வரலாறு
சுவாமி உருவமின்றி உள்ளதால் என்ன தெய்வம் என்பது குறித்து ஆராய்ந்தபோது ,விருத்தாச்சலம் திருத்தல வரலாற்றில் ‘தம்பிரான் தோழன் ‘என்று சொல்லக்கூடிய சுந்தரமுர்த்தி நாயனார் தில்லை இருந்து பதிகம் பாடி விருத்தாச்சலம் அடையும் போது ஊர் மற்றும் சுவாமி பெயர்களை கேள்வியுற்று முதுமை தன்மை வாய்ந்த இவர்களால் போன் ,பொருள் கிடைக்காது என கருதி பாடாமல் சென்ற போது திருமுதுகுன்ற ஈசனாகிய பரம்பொருள் அவரிடம் விளையாட எண்ணி தனது மைந்தன் முருகனிடம் ‘சுந்தரர் மதியாது செல்வதால் அவரை எமதிடத்திற்கு வருவிக்க செய் ‘ என ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளநல்லூர் என்று தெரிய வந்தது .அதன்படி விருத்தாச்சலம் நகருக்கு மேற்கு திசையில் முருகன் தான் பலிபீட உருவில் அமைந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டது .

திருத்தல பெருமை மற்றும் பிராது கட்டுதல் :
இத்திருத்தலத்தில் முருகர் நீதிபதியாகவும் வைத்தியராகவும் அருள்புரிகிறார் .அதன்படி பக்தர்கள் தங்களுடைய கஷ்டங்களையும் ,நியாயமான கோரிக்கைகளையும் எழுத்து மூலமாக சுவாமிக்கு பிராது செலுத்தி செலுத்திய நாளிலிருந்து 90 நாட்களுக்குள் முழுவதுமாக நிவர்த்தி பெறுவதும் ,கோரிக்கை நிறைவேறியவர்கள் பிராத்தனை திரும்ப பெற்றுக்கொள்வதும் அன்றாடம் நடந்து வருகிறது .

பிணி தீர்க்கும் வேப்பஎண்ணெய் :
கை கால் வலி உள்ளவர்கள் ,தீராத நோய் உள்ளவர்கள் இத்திருத்தலத்தில் ஒரு மண்டலம் ,அரை மண்டலம் என தங்கி கொளஞ்சியப்பரை தரிசித்து அவரது சன்னதியில் பூஜித்து வழங்கும் வேப்பஎண்ணெயினை உடம்பில் பூசியும் ,அருந்தியும் குணமடைந்து வருகின்றனர் .

 சித்தி விநாயகர்
முருகருக்கு அருகிலேயே சித்தி விநாயகருக்கும் தனிவிமானதுடன் கூடிய கருவறை உண்டு இவர் பெரிய திருமேனியுடன் காட்சி அளிப்பார் .இவருக்கு நேர் எதிரே இரண்டு பெரிய கம்பிரமான குதிரை உள்ளது .மற்றும் முனியப்பர் ,வீரனார் ,இடும்பன் ஆகியோர் சன்னதி கொண்டு இருக்கின்றனர் .முனியப்பர் நேரே நிறைய வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-kolanjiappar-temple-virudhachalam.html

திறந்திருக்கும் நேரம் மற்றும் அமைவிடம் :
காலை 6 முதல் இரவு 8 .30 வரை

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகில் உள்ளது . விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர், நல்லூர் செல்லும் பேருந்துகளில் சென்றால் 10 நிமிடங்களில் சென்றுவிடலாம் .

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *