Sri Kanayakumari Bhagavathi Amman Temple-Kanyakumari

ஸ்ரீ கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்- கன்னியாகுமரி

Sri Bhagavathi Amman  Temple- Kanyakumari

தாயார்: தேவி பகவதி

ஊர் : கன்னியாகுமரி

மாவட்டம் : கன்னியாகுமரி ,தமிழ்நாடு

  • இந்தியாவின் தென் கோடியில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதியில் தேவி கன்னியாக அமர்ந்திருக்கும் தலமாகும் .
  • இவ் இடத்தில் சூரியனின் உதயத்தையும் ,அஸ்தமனத்தையும் காண ஏராளமானோர் வருவார்கள்.
  • சுவாமி விவேகானந்தர் தவம் இருந்த இடம் மற்றும் மிக உயரமான திருவள்ளூர் சிலை ஆகியவை உள்ள பாறைக்கு படகில் சென்று தரிசிப்பது என்பது ஒரு வித உற்சாகத்தை நம் மனதுக்குள் அள்ளித்தரும் .
  • இவ் முக்கடல் சங்கமத்தில் கன்னியாக தேவி அமர்ந்திருந்தாலும் அவள் நம் எல்லோருக்கும் எல்லாவற்றையும் அள்ளித்தரும் அன்னையாக குடிகொண்டிருக்கிறாள் .
  • இவ் பகுதியில் பாணாசுரன் என்ற அசுரன் தனக்கு கணிப்பெண்ணை தவிர வேறு யாராலையும் அழிவு ஏற்படக்கூடாது என்ற வரத்தை பிரம்மாவிடம் வாங்கி ஆட்சி செய்தான்,அவன் அவ் வரத்தால் தேவர்களையும் ,முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான் , இதனால் தேவர்கள் எல்லாம்வல்ல அந்த ஈஸ்வரனை நோக்கி தவம் இருந்தனர் ,அவர்களுக்கு ஈஸ்வரன் தேவியோடு காட்சி கொடுத்து தன் உமையவள் குமரியில் கன்னியாக தோன்றி அவனை அழிப்பாள் என்று கூறினார் . கன்னியாக தோன்றிய தேவி ஈசனை நோக்கி தவம் இருந்ததால் தேவர்கள் பதறினார்கள் கன்னியாக இருந்ததால் தான் அசுரனை கொள்ளமுடியும் இறைவனை மணம் முடித்தால் எவ்வாறு கன்னியாக இருக்கமுடியும் என்று எண்ணி கவலையுற்றனர் அப்போது நாரதர் ஒன்றும் கவலை படவேண்டாம் இதுவும் இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்றுதான் என்று கூறினார் , அவளின் அழகில் மயங்கிய சுசீந்திரம் தாணுமாலன் மணம் முடிக்க தேவர்களிடம் வினவினார் அப்போது நாரதர் இறைவன் மற்றும் தேவியுடன் ஒரு நிபந்தையுடன் திருமணத்தை நடத்துவதாக கூறினார். அவ் நிபந்தனையானது ஆதவன் உதயத்தின் ஒரு நாழிகை முன்னதாக மாப்பிள்ளை திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்துவிடவேண்டும் அப்படியில்லை எனில் திருமணம் செய்ய இயலாது என்று கூறினார் ,திருமணம் வேலைகள் நடந்தன இறைவன் சுசீந்திரத்தில் இருந்து சீர் வரிசைகளுடன் புறப்பட்டார் அப்போது நாரதர் சேவலாக மாறி உரக்க கூவினார் ,இதைக்கேட்ட ஈசன் தன்னால் உதயத்திற்கு முன் செல்ல இயலாது என்று நினைத்து திரும்பிச்சென்றுவிட்டார் ,இதை அறிந்த தேவி கடும் சினம் கொண்டார் அப்போது அங்கு வந்த அசுரன் இவள் அழகில் மயங்கி தன்னை திருமணம் செய்யுமாறு கூறிக்கொண்டு அவளை தீண்ட நெருங்கினான் கடும் சினத்தில் இருந்த தேவி அவனை அழித்தாள் அப்போது தேவர்கள் முனிவர்கள் மலர்களை தூவி தேவியின் சினத்தை தனித்தனர் . இன்றும் தேவி ஈசனை நோக்கி தவம் செய்வதாக கூறுகிறார்கள் மற்றும் தன் குறைகளை வைத்து பூச்சொரிதல் நடத்தினால் எல்லாம் துன்பங்களும் விலகி வாழ்வில் மகிழ்ச்சியை அடையலாம் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-bhagavathi-ammantemple-kanyakumari.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 -11 , மாலை 4 -8 மணி வரை

கோயிலுக்குள் சட்டை அணிந்து செல்ல அனுமதி இல்லை

செல்லும் வழி:
கன்னியாகுமரி கடலின் அருகிலேயே உள்ளது.

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *