Sri kachapeswarar Temple- Kanchipuram

ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம்

Sri kachapeswarar Temple- Kanchipuram

இறைவன் : கச்சபேஸ்வரர்

இறைவி : சௌந்தராம்பிகை

தல தீர்த்தம் : இஷ்ட சித்தி தீர்த்தம்

ஊர் : காஞ்சிபுரம்

மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு

இக்கோயில், பல்லவர்களின் தலைநகரமாக விளங்கி ,பழம்பெருமை, கலைசிறப்பு ,பட்டு நெசவு ,கோயில்கள் என பல புகழ் கொண்ட கஞ்சி மாநகரத்தில் பிரதான சாலையான ராஜவீதியில் இத்தலம் அமைந்துள்ளது .

ஆலய  சிறப்பு :

திருமால் முதலிய தேவர்களும் ,முனிவர்களும் இந்த இறைவனை வழிபட்டதால் மூர்த்தி சிறப்பும் ,நைமிசாரணிய முனிவர்களுக்கு வழிகாட்டியதால் தல சிற்பமும் ,தன்னில் மூழ்வோர்களுக்கு எண்ணிய பயன்களை தரும் திருக்குளமும் உள்ளதால் தீர்த்த சிறப்பும் பெற்று விளங்குகிறது .

இக்கோயிலுக்கு தேவார பதிகங்கள் கிடைக்கவில்லை .ஏனினும் தேவார காலத்திற்கு முன்பே உள்ள தலம் இது என்று கூறுகிறார்கள் . கி.பி 7 ஆம் நூற்றாண்டில் தமிழில் இயற்றப்பட்ட தண்டியலங்காரம் என்ற இலக்கண நூலில் புகழ்பெற்ற இக்கோயில் பற்றி கூறப்பட்டுள்ளது .

தல வரலாறு :

திரிபுரம் எரித்த விரிசடைகடவுள் .ஒருமுறை ஐம்பெரும் பூதங்களையும் ,திருமால் ,பிரம்மன் மற்றும் அணைத்து சனாசரங்களையும் அழித்தார்.இரவு பகல் அற்ற பெருவெளியில் உமா தேவியார் காணும் படி திருநடனம் ஆடினார் .மீண்டும் உலகை படைக்க எண்ணிய அவர் எல்லா உலகங்களும் அழிகின்ற காலத்திலும் அழியாது உள்ள காஞ்சிபுரத்தில் சோதிமயமான லிங்கத்தில் இறைவன் தாமே தோன்றி தம் சக்தியால் உலக சராசரங்களையும் மால் ,அயன் போன்ற தேவர்களையும் மீண்டும் படைத்தருளினார் .அச்சோதி லிங்கத்தை பிரம்மன் சரஸ்வதி தேவியுடன் வழிபட்டு படைப்பு தொழிலை பெற்றார் . அமுதம் பெறுவதிற்காக மந்தார மலையை மத்தாக இட்டுப் பாற்கடலை கடைந்தனர் ,அபோது கடலினுள் அமிழ்ந்த மந்தார மலையை திருமால் ஆமை வடிவம் கொண்டு தன முதுகில் தாங்கி நிறுத்தி அமுதம் கிடைக்க வழிசெய்தார் .இதனால் செருக்குற்ற திருமால் உலகம் அஞ்சும்படி அக்கடல் முழுவதும் திரிந்து கலக்கினார் ,இதனை கண்டு அஞ்சிய தேவர்கள் ஈசனிடம் முறியிட்டனர் .அவர் அவ்விடம் சென்று அவ் ஆமையை அழித்து,அதன் ஓட்டினை தன மார்பில் அணிந்திருக்கும் வெண்டலை மாலையின் நடுவில் கோர்த்து அணிந்துகொண்டார் . ஆணவம் அழிந்த திருமால் ,தாம் செய்த குற்றம் நீங்க இந்த சோதிலிங்கத்தினை  வழிபட்டார் . அன்றுமுதல் கச்சபேசம் (கச்சம் – ஆமை) என்ற பெயர் பெற்றது . இக் கச்சபேச பெருமானை வழிபட நினைப்போர்  ,வழிபட சென்றோர், வழிபட்டோர் ,யாவரும் இவ்வுலகில் துன்பம் நீங்கி இன்பம் பெற்று முடிவில் முக்தியும் எல்லா நலமும் ,வளமும் பெறுவார்கள் .

Video

இத்தல இறைவனை சரஸ்வதி வழிபட்டுள்ளார் ,இக்கோயிலில் சரஸ்வதி தேவி தனி சன்னதியில் வீற்றியுளார் .

இத்தலத்தில் வந்து இறைவனை வழிபட்டு காதுவலி ,மண்டை குடைச்சல் ஆகியவற்றிற்கு பரிகார தலம்.

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-kachapeswarar-temple-kanchipuram.html

செல்லும் வழி:

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 km தொலைவில் இக்கோயில் உள்ளது .அருகிலேயே காமாட்சி அம்மன் கோயில் மற்றும் உலகளந்த பெருமாள் கோயில் உள்ளது .

திறந்திருக்கும் நேரம் :

காலை 5 .30 – 12 .00 ,மாலை 4 .00 – 8 .௦௦ வரை

Location :

Karchapeswarar Temple is situated in Kanchipuram city in Tamil Nadu, India. The speciality or special feature of this temple is that Lord Vishnu worships Lord Shiva. Karchapa means tortoise that is Lord Vishnu. Easwarar is Lord Shiva. Here lord Vishnu is in the form of Tortoise, one of the ten incarnations of Lord Vishnu. This temple is closely situated and adjacent to Lord Kanthakottam temple. These temples were constructed by the Pallava rulers and later renovated by Vijayanagar rulers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *