Sri Jambukeswarar Temple- Thiruvanaikaval

ஸ்ரீ ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் -திருவானைக்காவல்

Sri Jambukeswarar Temple- Thiruvanaikaval

இறைவன் : ஜம்புலிங்கேஸ்வரர்

இறைவி : அகிலாண்டேஸ்வரி

தல விருச்சகம் : வெண் நாவல்

தீர்த்தம் : நவதீர்த்தங்கள் ,காவேரி

புராணப்பெயர் : திருஆனைக்காவல் ,திருவானைக்கா

ஊர் : திருவானைக்காவல்

மாவட்டம் : திருச்சி  , தமிழ்நாடு

 • தேவார பாடல் பெற்ற வடகரை  தலங்களில் 60 வது தலம்.தேவார தலங்கள் 274 தலங்களில் 60 வது தலமாகும் .
 • பஞ்ச பூத தலங்களில் இத்தலம் நீர் தலம். 51 சக்தி பீடங்களில் இது ஞான  சக்தி பீடம்.
 • ஐந்து பிரகாரங்களை கொண்டது இந்த ஆலயம், ஆலயத்தின் மேற்கு கோபுரம் மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டியது. கிழக்கு கோபுரம் சுந்தரபாண்டியன்  கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. கிபி 13  ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தொடங்க ஹெய்சால அரசன் வீரசோமேஸ்வரன் கட்டி முடித்திருக்கிறார். மிக அதிகமான கலை நுணுக்கங்கள் கொண்ட சிற்ப கோபுரம் இது. 4 வது பிரகார மதிலுக்கு `திருநீறிட்டான் மதில்’ என்றும், 5  வது சுற்றிக்கு விபூதி  சுற்று என்றும் பெயர். இந்த விபூதி சுற்று கட்டும்போது இறைவனே நேரடியாக சித்தர் வடிவில் வந்து வேலை வாங்கியதாகவும் வேலை செய்தவர்களுக்கு கூலியாக விபூதி பைகளை கொடுத்ததாகவும் அவர்கள் அதை திறந்த பார்த்தபோது அவரவர் செய்த வேலைக்கு தகுந்தார்போல் காசுகள் கிட்டியதாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே ஆச்சுவருக்கு விபூதி சுற்று என்று பெயர் ஏற்பட்டது.
Sri Jambukeswarar Temple- Thiruvanaikaval
 • மூலஸ்தானத்தில் சதுரபீட ஆவுடையரில் ஜம்புலிங்கேஸ்வரர் அருள்பலிக்கிறார். கருவறைக்கு முன்னாள் நவத்வாரங்கள் கொண்ட ஒரு ஜன்னல் உள்ளது. இதற்கு `திருசாலகம்’ என்று பெயர். அதன்வழியே இறைவனை தரிசித்தால் ஒன்பது துவாரங்களை கொண்ட மனித சரீரம் நோயின்றி வாழும் என்று ஐதீகம். இந்த சாலக தரிசனம் மிகவும் விசேஷமானது. மூலவர் சன்னதிக்கீழே தரை மட்டத்திற்கு கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளன. இதன்வழியே இறங்கினால் ஜம்புலிங்கேஸ்வரரை தரிசிக்கலாம். இதை யானை புகமுடியாத மாட கோயிலாக அமைத்தார் செங்கட் சோழ நாயனார். கருவறை பின்புறம் ஸ்தலவிருச்சம் உள்ளது. இங்கே ஓங்காரவிநாயகரை தரிசிக்கலாம்.
 • அகிலாண்ட நாயகி பூஜை செய்த அப்புலிங்கேஸ்வரர் என்பதால் லிங்கத்திலிருந்து என்றும் வற்றாமல் நீர் கசிந்துகொண்டே இருக்கிறது. இதனால் கற்பகிரஹம் என்றும் ஈரமாகவே இருக்கும். உச்சிகால பூஜையில் அர்ச்சகர் புடவையானிது பூஜை நடத்துவார்கள் அம்பாளே பூஜை செய்வதாக நம்பப்படுகிறது  
 • அம்பாள் மிகவும் உக்கிரமாக இருந்ததால் ஆதி சங்கரர் சிவ சக்கரம் ,ஸ்ரீ சக்கரம் ஆகியவற்றை அகிலாண்டேஸ்வரிக்கு தோடுகளாக செய்து அவளுக்கு அணிவித்து அவளை சாந்தபடித்தினார் அதுமட்டும் அல்லாமல் அம்பாளின் சன்னதிக்கு எதிரே “பிரசன்ன கணபதியை “பிரதிஷ்டை செய்தார்.
Sri Jambukeswarar Temple- Thiruvanaikaval
 • மூன்றாம் பிரகாரத்தில் பிரம்மா,விஷ்ணு ,சிவன் மூவரும் ஒருங்கிணைந்த ஏக பாத மூர்த்தி சிற்பத்தை தரிசிக்கலாம் .குறத்தி மண்டபத்தில் நடன மங்கையர் மற்றும் குறி சொல்லும் குறத்தி போன்ற சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன .அம்மன் சன்னதியின் பின்புறம் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தூணில் தொந்தியில்லாத ,புலி காலுடன் கூடிய வியாக்ர விநாயகரை தரிசிக்கிலாம் .இங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ரிஷபகுஞ்சர சிற்பம் விசேஷமானது .காளையை காணும்போது யானையும்  ,யானையை காணும்போது   காளையும் தெரியாது .மற்றும் வீணை இல்லாத சரஸ்வதி ,மேதா தட்சணாமூர்த்தி ,பஞ்சமுக விநாயகர் ஆகியவர்களும் இவ் தலத்தின் சிறப்புவாய்ந்தவர்கள் .
Sri Jambukeswarar Temple- Thiruvanaikaval
 • புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது ,அங்கே இருந்த ஒரு வெண் நாவல் மரத்தின் கீழ் ஒரு சிவன் லிங்கம் இருந்தது .சிவகணங்களில் இருவர் தங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும் ,சிலந்தியாகவும் பிறந்தனர் .சிவலிங்கத்திற்கு கூரை இல்லாமல் வெறும் மரத்தின் கீழ் இருந்ததை கண்டு சிலந்தி சிவலிங்கத்தின் மேல் சிலந்தி வலையை பின்னி வெயிலில் இருந்தும் மழைகளிலிருந்தும் காத்தது,யானை காவேரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரை எடுத்துவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் .யானை சிலந்தி வலையை அசிங்கமாக நினைத்து அதை கிழித்துவிடும் ,சிலந்தி திரும்ப திரும்ப வலை கட்ட யானை அதை அழித்துக்கொண்டே இருந்தது ,யானையை தண்டிக்க நினைத்த சிலந்தி யானையின் தும்பிக்கையில் புகுந்துவிட்டது இரண்டும் போராட கடைசியில் மடிந்தன .இவைகளின் சிவபக்தியை மெச்சிய இறைவன் யானையை சிவககனங்களுக்கு தலைவனாக ஆக்கினார் .சிலந்தி மறுபிறவியில் கோச்செங்கட்சோழன் என்ற அரசனாக பிறந்து ,பூர்வ ஜென்ம ஞாபகத்தால் சோழன் யானை ஏறமுடியாதபடி குறுகலான படிகளை கொண்ட கட்டுமலைமீது சிவனை பிரதிஷ்டை செய்து 70 கோயில்களை கட்டினான் ,அவைகள் யாவும் ‘மாடக்கோவில் ‘ என்று அழைக்கப்படுகிறது .கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாட கோயில் இதுவாகும் . இவருடைய திருவுருவ சிலை நடராஜர் சன்னதியின் முன் உள்ளது . இவரும் 64 நாயன்மார்களில் ஒருவராவார் .இவர் செங்கட் சோழ நாயனார் என்று அழைக்கப்பட்டார் . இத்தலம் இவருடைய அவதார தலமாகும் .    
Sri Jambukeswarar Temple- Thiruvanaikaval
 • ஜம்புகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் நின்ற நிலையில் விஸ்வரூப மகாலட்சுமியும் ,இரண்டு தேவியருடன் சந்திரனையும் ,இரண்டு நந்தி தேவர்களையும் தரிசிக்கிலாம் .
 • இங்கு எழுந்தருளியுள்ள சனி பகவான் ,பால சனியாக குதிரை முகத்துடன் அன்னை சாயா தேவி மற்றும் மனைவியுடன் காட்சி தருகிறார் .
Sri Jambukeswarar Temple- Thiruvanaikaval
 • 20 கோஷ்ட தேவதைகள் கொண்ட சிவன் சந்நிதி உள்ளது இந்த தலம் ஒன்றில்தான் .
 • அகிலாண்டேஸ்வரி காலையில் லட்சுமியாக ,உச்சி காலத்தில் பார்வதியாகவும் ,மாலையில் சரஸ்வதியாகவும் நிகழ்வதால் மூன்று வண்ண உடை அலங்காரத்தில் காட்சிதருகிறார் .
 • அகிலாண்டேஸ்வரியின் அருள்பெற்ற மடப்பள்ளியில் பணியாற்றிய சிப்பந்தியே கவி காளமேகமாக பெயரும் புகழும் பெற்றார் .

திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .00 – 01 .00 வரை ,மாலை 03 .00 -08 .00 வரை

செல்லும் வழி:
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 8 km தொலைவில் உள்ளது .இக்கோயில் அருகில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மற்றும் உத்தமர் கோயில் உள்ளது .     

Location:        

https://www.google.co.in/maps/place/Tiruvanaikovil+Arulmigu+Jambukeswarar+Akhilandeswari+Temple/@10.8530295,78.7035156,17z/data=!3m1!4b1!4m12!1m6!3m5!1s0x3baaf42c54f10389:0x14910a1477472149!2sTiruvanaikovil+Arulmigu+Jambukeswarar+Akhilandeswari+Temple!8m2!3d10.8530242!4d78.7057043!3m4!1s0x3baaf42c54f10389:0x14910a1477472149!8m2!3d10.8530242!4d78.7057043?hl=en


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *