Sri Guruvayurappan temple – Guruvayur

ஸ்ரீ குருவாயூரப்பன் கோயில் – குருவாயூர்

Sri Guruvayurappan Temple, Guruvayur
Sri Guruvayurappan (Thanks google)
  • மூலவர் உன்னி கிருஷ்ணன். இவர் பாதாளஅஞ்சனம் என்னும் கலவையால் செய்யப்பட்டவர் .
  • இந்தியாவில் அதிகம் தரிசிக்கும் கோயில்களில் நான்காவது கோயிலாகும் .
  • கண்ணன் இங்கு குழந்தை வடிவமாக காட்சியளிக்கிறார் .
  • இங்குள்ள கம்சன் வதம் பண்ணிய தூண் குருவாயூரப்பனால தேர்தெடுக்கப்பட்டது என்று கூறுவார்கள்.
  • தேவ குருவும் வாயு பகவானும் கிருஷ்ணன் பரமபதம் அடைந்த ஏழாவது நாளில் கடல் கொந்தளிக்கும் போது மீட்ட படியால் குருவாயூர் என்று ஆனது. பரசுராமனை சுட்டிக்காட்டப்பட்டு விஸ்வகர்மாவால் நிறுவப்பட்ட தலம். அருகில் மம்மியூர் என்ற ஊரில் சிவபெருமான் பார்வதி தேவியரால் ஆசிர்வதிக்கப்பட்ட தலம் .
  • இங்குள்ள புஷ்காரணியில் நீராடினால் எல்லா வியாதிகளும் தீரும் .
  • நாராயணப்பட்டரால் நாராயணீயம் இயற்றப்பட்ட தலம் . ஒவ்வொரு லீலைகளை முடியும்போதும் அவர் உண்மையா என்று கிருஷ்ணரை பார்த்து வினவும் போது அவர் தலையை ஆட்டி ஒப்புதல் கொடுத்த சிறப்புக்குரியது நாராயணீயம் .
  • திருமண வைபோகங்கள் அதிகமாக இங்கு நடக்கும் ,இத்தலத்தில் திருமணம் நடந்தால் வாழ்கை சிறப்பாக நடக்கும் என்ற ஐதீகம் உண்டு .
  • இங்கு குழந்தைகளுக்கு அன்னம் அளிக்கும் அன்னப்ராசனம் மிக சிறப்பு பெற்றது .
  • இக்கோயிலில் 12 கால பூஜைகள் நடத்தப்படுகின்றன அதில் காலை
    3 .00 அளவில் நடைபெறும் நிர்மால்ய பூஜை மிக சிறப்பு வாழ்ந்தது . முதல் நாள் நடைபெற்ற பூஜையின் போது சூட்டப்பட்ட மாலையுடன் பூஜை நடைபெறும் இந்த தரிசனத்துக்கு நிர்மால்ய பூஜா தரிசனம் என்ற பெயர் .
  • இக்கோயிலின் துலாபாரம் ரொம்ப புகழ் பெற்றது . மற்றும் கிருஷ்ண ஆட்டம் மிக புகழ்பெற்றது .
  • இக்கோயிலில் யானைகள் தனமாக பெறுவார்கள் இவூரின் அருகில் இவ் யானைகள் வளர்பதற்காகவே இடம் உள்ளது . விசேஷ காலங்களில் யானைகளுக்கு ஓட்ட பந்தயம் வைத்து அதில் வெற்றி பெரும் யானையே ஸ்வாமியினை சுமந்து செல்லும் .
  • இக்கோயிலுக்கு சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் கண்டிப்பாக ஏற்படும் என்பதில் ஐயமில்லை .
  • வைகாசி ,மார்கழி ,கார்த்திகை மாதங்கள் மற்றும் விஷு நாட்களில் விழாகோலம் ஆகும் .

இந்த கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இந்த உன்னி கிருஷ்ணனை பற்றி India temple tour இல் எழுதியது எனக்கு மிகுந்த ஆனந்தத்தையும் ,மன நிம்மதியையும் தந்தது . அதைபோல் இன்றைய தினத்தில் இதை படித்து நேரில் கண்டு கிருஷ்ணரின் ஆசியை பெற்றது போல் நினைத்துக்கொண்டு அனந்த கொள்ளுங்கள் .

Sri Guruvayurappan Temple, Guruvayur
Temple Front Side( thanks google)

கோயில் திறக்கும் நேரம் மற்றும் வழி
காலை 3 .00 நடை திறப்பு ,
03 .00 -3 .30 (நிர்மாலயம் )
03 .30 – 3 .45 (வாகசார்த்து)
03 .45 – 4 .15 (அலங்காரம் )
04 .30 -06 .15 (உஷத் பூஜா )
06 .15 -07 .15 (சீவேலி)
07 .15 -09 .00 (அபிஷேகம் )
09 .00 -11 .00 (தரிசனம் )
11 .30 – 12 .30 (உச்சிகால பூஜை )
மாலை 4 .30 – 6 .15 (சீவேலி )
06 .15 -6 .45 (தீபாராதனை )
06 .45 -8 .45 (அத் தாழ பூஜை )
08 .45 -09 .00 (சீவேலி தரிசனம் )
09 .15 நடை சாத்துதல் .

திருச்சூரிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன. மற்றும் எர்னாகுளத்திலிருந்து காலையில் inter city மற்றும் passenger train திருச்சூர் வழியாக செல்லும் . அருகில் மம்மியூர் சென்று சிவனையும் தரிசிக்கலாம் .

Location map :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *