Sri Ekambareswarar Temple- Kanchipuram

ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில் -காஞ்சிபுரம்

Sri Ekkambareeswarar temple-Kanchipuram

இறைவன் : ஏகாம்பரேஸ்வரர்

தாயார் : காமாட்சி

தல விருச்சகம் : மாமரம்

தல தீர்த்தம் : சிவகங்கை

ஊர் : காஞ்சிபுரம்

மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு

Sri Ekkambareeswarar temple-Kanchipuram
 • தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்று . தொண்டைநாடு தலத்தில் முதலாவது தலமாகும் . பஞ்ச பூத தலங்களில் நிலத்தை சார்ந்த தலமாகும் .
 • 192 அடி உயரம் , 9 அடுக்குகள் , 11 கலசங்கள் , 4 பெரிய பிரகாரங்கள் ஆகியவை கம்பீரமாக அமைந்துள்ளது . கிழக்கு கோபுரம் கிபி 1509 விஜய நகர்த்தரசர் கிருஷ்ண தேவராயரால் நிறுவ பட்ட ராஜா கோபுரமாகும் . இக்கோவிலை பல்லவர்களே முதன் முதலில் கட்டி உள்ளார்கள் . அதற்க்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன . பின்னர் சோழர் காலத்தில் புனரமைத்து உள்ளார்கள் .
 • உள்ளே உள்ள தடாகம் ஒரு காலத்தில் கம்பையாறு என்ற ஆறாகும் . மேற்க்கே ஆயிரும் கால் மண்டபம் உள்ளது . இங்கே உள்ள சிற்பங்கள் நம் மனதை கவர்ந்திழுக்கும் வண்ணம் உள்ளது . இதை ஒட்டி உள்ள பல்லவ கோபுரம் உளளே விகட சக்கர விநாயகரை தரிசிக்கலாம் .
 • தெற்கு பிரகாரத்தில் லிங்க பேசர் சன்னதி உள்ளது . மேற்கு பிரகாரத்தில் விண்டுலீசர் சந்நதி உள்ளது.
Sri Ekkambareeswarar temple-Kanchipuram
Sri Ekkambareeswarar temple-Kanchipuram
Mango Tree
 • மண் லிங்கம் : சிவபெருமான் இங்கு பிருத்வி லிங்கம் என்று அழைக்கப்படுகிறார் . இவர் மண்ணால் ஆனவர் , சுயம்பு லிங்கமாகும் ஆதலால் இவருக்கு அபிஷேகம் நடைபெறுவதில்லை , மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது .
 • இங்கு அம்மனுக்கு தனி சன்னதி இல்லை . கருவரைக்கு முன் உள்ள பிரகாரத்தில் வலது புறத்தில் 108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றான நிலாத்துண்ட பெருமாள் சன்னதி உள்ளது.
 • மாமரம் : இங்குள்ள மாமரம் 3500 வருடங்கள் முற்பட்டதாகும் ,இம்மரத்தில் உள்ள நான்கு கிளைகள் நான்கு வேதங்களை குறிக்கிறதாகும் ,இவ் நான்கு கிளைகளில் நான்கு விதமான சுவையுடைய பழங்களை தருகிறது ,இவ் மரத்தின் கிழே சிவபெருமான் பார்வதி திருமணம் நடைபெற்றதாகவும் ஆதலால் இவ் மரத்தின் கீழ் நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன .
 • சுந்தர மூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை இரண்டாவது திருமணம் செய்யும்போது ‘உன்னை பிரியேன் ‘ என்று சிவனை சாட்சியாய் வைத்து திருமணம் செய்தார் ,ஆனால் அதை அவர் மீறியதால் தன் கண்பார்வையை இழந்தார் .இழந்த பார்வையை பெறுவதிற்காக இங்கு பதிகம் பாடி தன் இடக்கண் பார்வையை பெற்றார் .
 • ஏகாம்பரேஸ்வரர் உற்சவர் மூர்த்தி தனி சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்திராட்ச பந்தலின் கிழே உள்ளார். இவ் பந்தல் 5008 ருத்திராட்சங்கள் கொண்டு அமைக்கப்பட்டதாகும் .கண்ணாடியில் ருத்ராட்சத்துடன் எல்லையற்ற சிவனின் உருவத்தையும் சேர்த்து தரிசிக்கலாம்.இக்காட்சியை பார்த்தால் பிறப்பில்லா நிலையை அடையலாம் .
 • இசை மும்மூர்த்திகளான தியாகராஜர் ,சியாமா சாஸ்திரிகள் ,முத்துசாமி தீட்சிகர் மற்றும் பாபநாசம் சிவன் ஆகியோர்கள் இக்கோயிலை பற்றி பாடியுள்ளார் .
Sri Ekkambareeswarar temple-Kanchipuram
 • வரலாறு : சிவன் யோக நிலையில் இருந்தபோது விளையாட்டாக பார்வதி தாயார் அவருடைய கண்களை மூடினார் ,அப்போது கிரகங்கள் இயங்குவதை நிறுத்தின ,சூரியன் உதிக்கவில்லை,உலகம் இருண்டு தன் செயல்களை நிறுத்தின. தன் தவறை உணர்ந்த பார்வதி தேவி சிவ பெருமானிடம் மன்னிப்பு கேட்டார் . சிவ பெருமான் பார்வதி தேவி செய்த தவறுக்கு தண்டனை கொடுக்க எண்ணி தேவியை பூலோகத்தில் சென்று தன்னை நோக்கி தவம் செய்து வழி பட விமோச்சனம் கிடைக்கும் என்று கூறி இத்தலத்தை தவம் செய்ய காட்டினார் . அவ்வாறு தேவி இத்தலத்திற்கு வந்து மணலால் ஒரு லிங்கம் செய்து கடும் தவம் செய்தார், அப்போது சிவ பெருமான் தேவியின் தவ வழிமையை சோதிட தன் தலையில் உள்ள கங்கையை அனுப்பினார் . வெள்ளம் கரை புரண்டோடி வரும் கங்கை நதியிடமிருந்து சிவ லிங்கம் கரைவதிலிருந்து காப்பாற்ற சிவ லிங்கத்தை தன் இரு கைகளால் ஆரதழுவிகொண்டார் . தேவியின் பக்தியை கண்டு மனம் குளிர்ந்த சிவ பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து பாவத்தில் இருந்து விமோச்சனம் தந்து திருமணம் செய்து கொண்டார் . இதனால் இவருக்கு தழுவ குழைந்த நாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டு . இன்னும் தேவி சிவ பெருமானை தழுவிய வடு லிங்கத்தின் மேல் உள்ளது .
Sri Ekkambareeswarar temple-Kanchipuram
Moolavar

கோவில் திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 – 12 .30 மாலை 4 .30 – 8 .30

செல்லும் வழி :
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 km தொலைவில் உள்ளது . அருகில் காமாட்சி அம்மன் கோவில் , குமர கோட்டம் கோவில் உள்ளது . சென்னையில் இருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளது .

         ஓம் நம சிவாய 

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *