Sri Brihadeeswara Temple- Thajavur

ஸ்ரீ ராஜராஜேஸ்வரம் கோயில் (பிரகதீஸ்வரர் )- தஞ்சாவூர்

Sri Brihadeeswara Temple- Thajavour

இறைவன் : பெருவுடையார் ,பிரகதீஸ்வரர்

இறைவி : பெரியநாயகி ,பிருகந்நாயகி

ஊர் : தஞ்சாவூர்

மாவட்டம் : தஞ்சாவூர் ,தமிழ்நாடு

தல வரலாறு : தஞ்சகன் ஆண்ட ஊர் என்பதால் தஞ்சகனுர் என்று அழைக்கப்பட்டது நாளடைவில் இவ் பெயர் மருவி தஞ்சாவூர் என்று இப்போது அழைக்கப்படுகிறது .கி.பி 850 ம் ஆண்டு சாத்தன் பழியிலி என்ற முத்தரையர் குலசிற்றரசனிடம் போரிட்டு பரகேசரி விஜயாலய சோழன் இந்த தஞ்சை சோழ பேரரசு பரம்பரையை தோற்றுவித்தான் . பிற்கால சோழர்களில் தோன்றியவரே இக்கோயிலை உருவாக்கிய ராஜராஜ சோழன் .

இரண்டாம் பராந்தக சோழனின் (சுந்தர சோழன் ) இளைய மகனாக ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில் பிறந்தான் .அருள்மொழி தேவன் என்ற பெயர் சூட்டப்பட்டான் . ராஜகேசரி என்ற பெயராலும் அழைக்கப்பட்டான் .சிவபாத கேசரன்,திரு நீற்று சோழன் ,ஷத்ரிய சிகாமணி ,மும்முடி சோழன் என்ற பட்ட பெயர்களும் இவனுக்கு உண்டு .சிதம்பரம் மூவாயிரத்தாரால் இராஜராஜ சோழன் என்ற பெயர் சூட்டப்பட்டவன் .

Sri Brihadeeswara Temple- Thajavour

நம் பண்பாடுகளையும் ,ஆன்மிகங்களையும் இவ் உலகுக்கு எடுத்து சொன்னவர்கள் சோழர்கள் என்பது நிதர்சமான உண்மை .இவர்கள் தஞ்சை மண்டலத்தை கி மு 2 ம் நூற்றாண்டில் இருந்து கி பி 13 நூற்றாண்டு வரை சுமார் 1500 வருடங்கள் ஆட்சி செய்தனர் .

இராஜராஜ சோழன் வடக்கே கிருஷ்ணா நதி முதல் வடமேற்கே துங்கபத்ரா வரை,தெற்கே இலங்கை வரை தன் சோழ சாம்ராஜ்யத்தை விஸ்தரித்து தன் வீரத்தை உலகுக்கு வெளிக்காட்டினான் .

Sri Brihadeeswara Temple- Thajavour

ஈசனின் மீது முகுந்த பற்று கொண்டவன் என்பதால் ஈசனுக்காக மிக பிரமாண்டமான ஒரு கோயில் கட்டவேண்டும் என்ற பேராவலின் காரணமாக இக்கோயில் உருவாகியது .இக்கோயில் கி பி 1010 கட்டிமுடித்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது .

பெதுவாக கோயில்களில் ராஜகோபுரம் தான் உயரமாக இருக்கும் .கருவறை விமானங்கள் அதைவிட தாழ்ந்துதான் இருக்கும் .ஆனால் சோழர்கள் கட்டிய பெரிய கோயில் (ராஜராஜ சோழன் -கி பி 985 -1014 ),இவரின் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கண்டா சோழபுரம் (கி பி 1014 -1044 ),இரண்டாம் ராஜராஜ சோழன் கட்டிய தாராசுரம் ஐராவதேஸ்வரர் (கி பி 1046 -1173 ),மூன்றாம் குலைந்துங்க சோழன் கட்டிய திருபுவனம் கம்பஹரேஸ்வரர் (கி பி 1178 -1218 )இந்த நான்கு கோயில்களும் விமானங்கள் பெரியதாக இருக்கும் .

பெரிய கோயிலின் விமானம் மிகத் திறமையான தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுக்கான் பாறை நிலப்பரப்பில் 350 அடிக்குத் தொட்டி போன்ற பகுதியை உருவாக்கியிருக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்த காட்டாறுகளில் இருந்து மணலைக் கொண்டு அத்தொட்டியில் கொட்டியிருக்கிறார்கள். அதன் மேல் மரக்கால் வடிவில் அடித்தளம் அமைத்து கனமான கல் பொருத்தி தரைமட்டத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.அதுவரை ஒற்றைச் சுவராகக் கொண்டு வந்து தரைக்கு மேலே இரட்டைச் சுவராகக் கொண்டுபோய் கோபுரமாக உயர்த்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் வடிவத்தில் இருக்கிறது விமானக் கட்டுமானம். இதற்குப் பெயர், டைனமிக் ஆர்க்கிடெக்சர். இதன் சிறப்பு என்னவென்றால், பூமியின் ஆட்டத்துக்கேற்றவாறு கோபுரமும் அசைந்து தன்னைத் தாங்கி நிலைநிறுத்திக்கொள்ளும் . அதனால்தான் எல்லா இயற்கைச் சீற்றங்களையும் தாக்குப்பிடித்து நிற்கிறது.

Sri Brihadeeswara Temple- Thajavour

இந்த கோவிலின் கட்டுமானம் தமிழ் மொழியின் பெருமையை எடுத்துக்கூறும் விதத்தில் அமைந்துள்ளது. அதாவது கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழ் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216 . சிவலிங்கத்தின் உயரம் 12 அடி. தமிழ் உயிரெழுத்துக்கள் 12 . சிவலிங்க பீடம் 18 அடி. தமிழ் மெய் எழுத்துக்கள் 18 . சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள். இந்த கோபுரத்தின் உச்சியில் 12 அடி உயரம் 81 டன் எடையுள்ள ஒரே கல் சிகரமாக அமர்த்தப்பட்டுள்ளது .எந்தவித இயந்திரங்கள் துணை இல்லாமல் அப்போது 216 அடி உயரத்திற்கு இக் கல்லை கொண்டுசென்று அமைத்தது ஒரு வியப்பான மற்றும் கட்டட கலைக்கு ஒரு சிறந்த உதாரணமாகும் . இக்கலை தஞ்சையில் இருந்து சுமார் 20 கி மீ தொலைவில் உள்ள பள்ளம் என்ற ஊரில் இருந்து சாரம் கட்டி அதன் மீது இக்கல்லை மெல்ல மெல்ல நகர்த்தி அங்கு உச்சிக்கு ஏற்றியுளார்கள் .அதனாலேயே அந்த ஊருக்கு ‘சாரப்பள்ளம் ‘ என்ற பெயர் ஏற்பட்டது . இவ் விமான சிகரத்தின் நான்கு மூலைகளிலும் உள்ள நந்திகள் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டது பார்ப்பதற்கே கோடி கண்கள் வேண்டும் .இவ் விமானம் கூம்பு போல் அமைக்கப்பட்டிருக்கும் “தக்ஷணமேரு “அமைப்பை சார்ந்தது .கோபுரத்தின் கலசத்தின் நிழல் கிழே விழாதபடி கட்டியுள்ளார்கள்.

இக்கோயில் கட்டும்போது ‘அழகம்மை‘ என்ற கிழவி அங்கு வேலை செய்தவர்களுக்கு தன்னால் முடிந்த நீர் ,மோர்,உணவு கொடுத்தும்,அடிபட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்துவந்தால் அவளின் உதவியை கண்டு தலைமை சிற்பி அவளை கவுரவப்படுத்த நினைத்து அவளின் வீட்டுக்கு முன்னாள் கிடந்த ஒரு கருங்கல்லில் தாமரை பூவை செதுக்கி அதை அவளிடம் காட்டி அதை கோபுர விமானத்தில் பொறுத்தினான். மன்னரின் கனவில் சிவபெருமான் தோன்றி அவள் தனக்கு அளிக்கும் உதவிகளை கூறி மறைந்தார் ,மன்னர் அவளை கண்டு அவளுக்கு ஈசனுக்கு உற்சவத்தின் போது குடை பிடிக்கும் பாக்கியத்தை அளித்தார் .இன்றும் உற்சவத்தின் போது ஈசனுக்கு அவளின் சந்ததியர்களே குடை பிடிக்கிறார்கள் .

முகப்பில் உள்ள ஐந்து தளங்களைக் கொண்ட கேரளாந்தகன் திருவாயிலில் முதல்தளம் தவிர, மற்றவை செங்கற்களால் கட்டப்பட்டவை. இந்தச் செங்கற்கள் சிறப்பான தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. அடப்பமரம், மாமரம், கடுக்காய் மரம், தாணிக்காய் மரம் ஆகியவற்றின் பட்டைகளையும், திரிபலா எனப்படும் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றையும் கஷாயமாக்கி, மண்ணில் ஊற்றி, ஐந்து மாதங்கள் புளிக்கப் புளிக்கப் பிசைந்து, செங்கலாக அறுத்து, சுட்டு, ஒரு மாதம் ஆறவிட்டு, தண்ணீரில் ஊறவிட்டு, நன்கு உலரச்செய்து அதன் பிறகே கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 அடி நீளம், 3 அடி அகலம், 40 அடி உயரத்தில் ஒரே கல்லிலான இந்த 2 நிலைக்கால்களும் தஞ்சையில் இருந்து குறைந்த பட்சம் 80 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளன. ராஜராஜன், கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன் போர் தொடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக இந்த வாயிலுக்கு ‘கேரளாந்தகன் வாயில்‘ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இங்கு சிவபெருமானுக்கு எதிரில் உள்ள பெரிய நந்தி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. அதோடு ராஜராஜ சோழன் வைத்த நந்தி சிலை மாற்றப்பட்டு, மராட்டியர்களால் வைக்கப்பட்ட நந்தி சிலை தான் இப்போது உள்ளது. இன்றளவும் அந்த பழைய நந்தி சிலை கோயில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஈசனனின் பிரமாண்டமான திருமேனி : கோவில் கருவறையில் பிரகதீஸ்வரர் என்ற பெரிய லிங்கம் இடம்பெற்றுள்ளது. கருவறையைச் சுற்றி 6 அடி அகலத்தில் சாந்தாரம் என்ற சுற்று அறை உள்ளது. இந்த அறைக்கு தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் மிகப்பெரிய வாயில்கள் உள்ளன. இங்கு படிக்கட்டுகள் கிடையாது. காற்று இவ்வறைக்குள் புகுவதற்கு இவை அமைக்கப்பட்டுள்ளன. கடுங்கோடையிலும் இச்சுற்று அறையில் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டே இருக்கும். இந்த அறையின் கட்டுமான அமைப்பு ஐம்பூதங்களுள் ஒன்றான காற்று இறைவனை ஆராதிக்கும் வகையில் அமைந்துள்ளது. கருவறையினுள் 13 அடி உயரத்தில் சிவலிங்கம் உள்ளது. சிவலிங்கத்தின் கீழ் 55 அடி சுற்றளவு உடைய வட்ட பீடமும், 6 அடி நீள கோமுகமான நீர்த்தூம்பும் அமைந்துள்ளன.

கல்வெட்டுகள் : இங்குள்ள அஸ்திவாரங்களில் உள்ள ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொருவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பொன்னள்ளி கொடுத்தோர் முதல் கல் கொடுத்தோர் வரை எவரின் பெயரும் வரலாற்றில் விட்டுப்போய்விடக் கூடாது என்பதில் ராஜராஜன் அக்கறை காட்டியுள்ளார் .

இக்கோயிலுக்கு ஏராளமானோர் பங்களிப்புச் செய்திருந்தாலும் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர்கள் 12 பேர். அரசன் ராஜராஜன், தலைமைத் தச்சன் குஞ்சரமல்லன், அவனது உதவியாளர்கள் நித்த வினோதப் பெருந்தச்சன், கண்டராதித்த பெருந்தச்சன். பெரும் கொடை வழங்கிய ராஜராஜனின் சகோதரி குந்தவை, பல்வேறு கட்டுமானப் பணிகளில் பங்கெடுத்துக்கொண்ட ராஜராஜனின் சேனாபதி கிருஷ்ணன் ராமன், நிர்வாக அதிகாரி பெய்கைநாட்டுக் கிழவன் தென்னவன் மூவேந்த வேளாண், ராஜராஜனின் குருமார்கள் ஈசான சிவபண்டிதர், சர்வ சிவ பண்டிதர், மகன் ராஜேந்திரன், கோயிலின் தலைமைக் குரு பவனப்பிடாரன், கல்வெட்டுகளைப் பதிப்பித்த இரவி பாருளுடையான்..!

இவ்வளவு பெருமைகளும் ,புகழும் மற்றும் கட்டட கலைகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் இக்கோயிலின் மகா கும்பாபிஷேக திருவிழா 23 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 05 .02 .2020 தேதி மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது எல்லோரும் சென்று எல்லாம் வல்ல அந்த ஈசனின் அருளை பெறுக !

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-brihadeeswara-temple-thajavur.html

திறந்திருக்கும் நேரம் : காலை 6 .00 -12 .30 வரை மாலை 4 .00 முதல் இரவு 8 .30 வரை .

செல்லும் வழி: சென்னையில் இருந்து சுமார் 385 km தொலைவில் உள்ளது. மாயவரம் வழியாகவும் பேருந்துகள் செல்லுகின்றன . சென்னையில் இருந்து ரயில்கள் செல்லுகின்றன .மற்றும் திருச்சியில் இருந்து சுமார் 60 km தொலைவில் உள்ளது .அதிக பேருந்து வசதிகள் உள்ளன .

The Cholas ,the mightiest rulers of south india,at one point of time held sway over major parts of south india and srilanka.the also made their presence felt over North india and even south east Asia.It was showered with impartance by chola Rajaraja 1 (985-1014 CE) with the construction of his monumental Brihadeeswara temple.

The ambitious Brihadeeswara temple by Rajaraja-1 was begun in 1003 and completed in 1010 CE and was designed to represent a cosmic stucture-the Mahameru.this temple is dedicated to siva represented by a linga (3.66m high)and named Rajarajaeswaramudayar after the king himself.

The vimana soars to hight of 60.96m and the stone sikhara(8 Pieces) at the top weights 81.284 tonnes.the inner sanctum is squre.

Location :

For More beautiful photos please click following link…

https://flic.kr/s/aHsmLbvHKe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *