Sri Atulya Nadeswarar Temple- Arakandanallur

ஸ்ரீ அதுல்யநாதேஸ்வர் திருக்கோயில் – அரகண்டநல்லூர்

Arakandanallur Sri Athulya nadeswarar Temple,
Main Entrance

இறைவன் : ஸ்ரீ அதுல்யநாதேஸ்வர் , ஸ்ரீ ஒப்பிலாமணீஸ்வரர் ,ஸ்ரீ
அறையணி நாதர்

இறைவி : ஸ்ரீ சௌந்தர்ய கனகாம்பிகை ,ஸ்ரீ அருள்நாயகி,ஸ்ரீ அழகிய
பொன்னழகி

தீர்த்தம் : தென்னப்பெண்ணை ஆறு , பாண்டவா தீர்த்தம்

தல விருச்சம் : வில்வ மரம்

  • 274 பாடல் பெற்ற தலங்களில் இது 223 வது சிவ தலமாகும் . நடு நாட்டு தலங்களில் 12 வது தலம்.
  • திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வரும் பொது மற்ற சமயத்தினர் இக் கோயிலின் கதவை சாத்தி பூஜை செய்யாமல் வைத்திருந்தனர் . அப்போது ஞானசம்பந்தர் பாடி கதுவுகளை திறக்கவைத்தார் . அதனாலே இங்குள்ள பிரதோஷ நந்தி வலது புறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து அவர் எளிமையாக தரிசிக்க வழிவிட்டனர்.
  • பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் காலங்களில் இங்கு வந்து இக் குகையறையில் வாழ்ந்தனர் .
  • ரமண மஹரிஷையை ஆட்கொண்ட இடம்.
  • ஞானசம்பந்தருக்கு திருஅண்ணாமலையை காட்டியமலை.
  • மெய்ப்பொருள் நாயனார் ,நரசிங்கமுனையரையர் ஆட்கொள்ளப்பட்ட இடம் .
Pancha pandavar cave,Arankandanallur
Panchapandavar Cave

திறந்திருக்கும் நேரம் மற்றும் வழி

காலை 7 .00 மணி முதல் 10 .00 வரை ,மலை 4 .00 முதல் இரவு 7 .00 வரை

விழுப்புரம் இருந்து திருக்கோயிலூர் பேருந்தில் சென்றால் திருக்கோயிலுக்கு 3 km முன்னதாக உள்ளது . விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் ரயிலில் சென்றால் அரகண்டநல்லூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது .

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
—–திருச்சிற்றம்பலம் —

Location Map:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *