Sri Arunachaleswar Temple- Thiruvannamalai

ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் -திருவண்ணாமலை

Sri Arunachaleswarar temple - Thiruvannamalai

இறைவன் : அருணாசலேஸ்வரர் ,அண்ணாமலையார்

இறைவி : அபிதகுசாம்பாள் ,உண்ணாமலையம்மை

தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

தல விருச்சகம் : மகிழம் மரம்

ஊர் : திருவண்ணாமலை

மாவட்டம் : திருவண்ணாமலை ,தமிழ்நாடு

  • தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் 22 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற 274  தலங்களில் 233 வது தலமாகும் . 51 சக்திபீடங்களில் இவ் தலம் அருணை சக்தி பீடமாகும் .
  • கி.பி 1230 பல்லவ அரசர் கோப்பெருந்சிங்கனின் புதல்வர் வேணுவுடையார் எடுத்த பிரம்ம தீர்த்தமே ஸ்தல தீர்த்தமாகும் .தீர்த்தவரிகள் நடக்கும் இடம் ஆகும் .
  • நான்காம் சுற்றிலிருந்து மூன்றாம் சுற்றுக்கு செல்லும் பாதையில் கிளி கோபுரத்தை பார்க்கலாம் .கி .பி 1053 ல் இதை ராஜேந்திர சோழன் அமைத்தார் .கிளி கோபுரத்திலிருந்து நேரேயுள்ள பதினாறு கல் மண்டபத்தை மங்கையர்கரசியார் நிறுவியுள்ளார் . இவ் மணடபத்தில்தான் தீபத்திருவிழா அன்று பஞ்சமூர்த்திகளும் ,அர்தநாரீஸ்வரம் எழுந்தருளி காட்சி கொடுக்கும் மண்டபமிது .
  • தேவி மகாத்மியம் என்ற நூலில் மண்ணில் முதன் முதலில் கொண்டாடப்பட்ட திருவிழா கார்த்திகை திருவிழா என்று சொல்கிறது .அதற்கு பெருமை சேர்க்கும் தலம் திருவண்ணாமலை ஆகும் .
  • தன்னை வணங்காத பிருங்கி மகரிஷியின் மீது கோபம் கொண்டு தாயார் கடும் தவம் இருந்து இறைவனை  விட்டு நீங்கவே முடியா வண்ணம் அவரின் திருமேனியில் இடப்பாகம் பெற்று அர்தநாரிஸ்வரராக  ஆனதும் இந்த தீப திருநாளாகும் .
  • சக்தி தன் பாவம் நீங்க தவமிருந்த இடம் இந்த திருவண்ணாமலை ஆகும் .திருக்கார்த்திகை அன்று ஈசன் அன்னைக்கு காட்சி கொடுத்தார் .
  •  புனுகு பூனை ஒன்று ஈசனுக்கு புனுகு சாத்தி திருவண்ணாமலையில் வழிபட்டது .அதன் பலனாக இறைவனின் அருளால் மறுபிறவியில் அயோத்தி மன்னன் ஹே மாங்கதனாக பிறந்தார் .அவர் நன்றி மறவாமல் ஆயுள் முழுவதும் இங்கு வந்து புனுகு சாத்தி வழிபட்டான் .அதன் நினைவாக தீபத்திருவிழாவில் ‘புனுகு சட்ட வைபவம் ‘கொண்டாடப்படுகிறது .
  • கிருதாயுகத்தில் அக்னி கிரியாகவும் ,திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க வண்ண பர்வதமாகவும் ,கலியுகத்தில் கல்கியாகவும் மாறுவதாக ‘அருணபுராணம்’ கூறுகிறது.
  • உலகில் உள்ள பழமையான மலைகளில் திருவண்ணாமலையும் ஒன்று .இதன் வயது 260 கோடி ஆண்டுகள் என்கிறார்கள் .இந்த மலை எரிமலையாக இருந்து பின்னர் குளிர்ந்துவிட்டதாக கூறுகிறார்கள் .
  • கடல் மட்டத்தில் இருந்து 2668 அடி உயரத்தில் இதன் சிகரம் உள்ளது. ஒரு மலையில் ஏராளமான சிகரங்கள் உள்ளன ,சுயம்புவான மலையிது .கிழக்கு பாகத்தில் இருந்து பார்த்தால் மலை ஏக லிங்கமாக தெரியும் .சற்று தள்ளி நின்று பார்த்தால் மலை சிவசக்தி சொரூபமாக இரண்டாக தெரியும் ,மேற்கில் இருந்து பார்த்தால் மூன்று சிகரங்களாக பார்க்கலாம் .சற்று தூரம் திரும்பி பார்த்தால் ஈசனின் பஞ்ச முகங்கள் போல் 5  கூம்புகள் தென்படும் .
  • பஞ்ச பூத தலங்களில் இது நெருப்பு தலமாகும் .ஈசன்  நெருப்பாக நின்றதலம். திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிட்டும் .
  • மகப்பேறு இல்லாத வள்ளலான மகராஜனுக்கு மகனாக ஈசனே எழுந்தருளினார் ,இன்றும் மாசி மகத்தன்று தகப்பனுக்கு ஈசனே எழுந்தருளி ஈமக்கிரியைகள் செய்யும் அற்புத தலம் இது . தீபா திருநாள் அன்று கரும்பு தொட்டில் சுமந்து வேண்டிகிண்டல் விரைவில் பிள்ளைவரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது .
  • குந்தி தேவி பிள்ளைவரம் பெற்ற தலம் இது .அருணகிரிக்காக கந்தன் தூணை பிளந்து வந்தும் ,அருணகிரியார் கிளிரூபமாக இருந்து கந்த நுபூதிபாடி அருளியதும் இவ் தலத்தில் தான் .இங்கு விநாயகருக்கு பதில் முருகர் பிரதான முதல் கடவுள் .  
  • செந்தூர் விநாயகர் : திருவண்ணாமலையில் அருளும் இந்த செந்தூர் விநாயகரின் அறுபடை வீடுகளில் முதலாவது தலமாகும் .சம்பந்தாசுரன் என்னும் அசுரனை விநாயகர் வாதம் செய்தபோது அவனது ரத்தத்தில் இருந்து பல்லாயிரம் அசுரர்கள் உருவாகினார்கள் .இதை தடுப்பதற்காக ரத்தத்தை தன உடலில் பூசிக்கொண்டார் .இதனால் இங்கு சித்திரை பிறப்பு ,விநாயகர் சதுர்த்தி ,திருக்கார்த்திகை தீப நாள் மற்றும் தாய் மாதத்தில் பௌர்ணமி ஆகிய நான்கு நாட்கள் விநாயகருக்கு செந்தூரம் சாத்தப்படுகிறது .இவ் சன்னதிக்கு முன் உள்ள மண்டபத்தில்தான் அந்த காலத்தில் மன்னர்கள் பட்டாபிஷேகம் நடத்துவர் .
  • அம்பாளை பாதுகாக்கும் நந்தி : ஆலயங்களில் அம்பாள் சன்னதிக்கு முன்பு சிம்மம்தான் அமைக்கப்பட்டிருக்கும் .ஆனால் இங்கே நந்தி அம்பாள் சன்னதியின் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் .ஈசனிடம் கோபித்துக்கொண்டு பூலோகத்தில் வந்த பார்வதி தேவி இத்தலத்தில் தவம் இருந்தார் .அவருக்கு துணையாக நந்தி தேவர் பூலோகம் வந்துவிட்டார் .
  • இவ் தலத்தில் சதுர்புஜத்துடன் வீற்றியிருக்கும் அபிதகுசலாம்பாள் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சுமார் 6அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறார் .காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் 1967 ஆண்டு இத்தலத்திற்கு வந்தபோது ஸ்ரீ சக்கரத்தை தாயார் சன்னதியில் பிரதிஷ்டை செய்தார் .
  • லிங்கோத்பவர் : சிவனின் அறுபத்து நான்கு கோலங்களில் லிங்கோத்பவர் என்பதும் ஒன்றாகும் .சிவலிங்கத்தின் அடியையும் ,முடியையும் தேடும் விதத்தில் அன்னப்பறவையாக பிரம்மாவும் வராக மூர்த்தியாக திருமாலும் இருப்பதாய் காணலாம் .இந்த புராணநிகழ்வை அடிப்படியாகத்தான் திருவண்ணாமலை கார்த்திகை விழா நடக்கிறது .எல்லா சிவன் கோயில்களிலும் கருவறை பின்புறம் லிங்கோத்பவர் சன்னதி இருக்கும் .
Thiruvannamalai girivalam
Thiruvannamalai Girivalam

கிரிவலப்பாதை

சுமார் 14 km தூரம் கொண்டது கிரிவலப்பாதை .அஷ்ட லிங்கங்கள் ,ஆதி அண்ணாமலை ,நேர் அண்ணாமலை ,சந்திர சூரிய லிங்கங்கள் ,16 விநாயகர் கோயில்கள்,7 முருகன் கோயில்கள் ,வலது கையில் லிங்கம் ஏந்தி அருளும் ஆதி காமாட்சி கோயில் என மொத்தம் 99 கோயில்களை கொண்ட தெய்வீக கிரிவல பாதை ,இவ்வழியே நாம் செல்லும் பொது பல திருமடங்கள் ,தீர்த்தங்கள் ,சித்தர்களின் கோயில்கள் ஆகியவற்றை காணலாம் .

கிழக்கு வாசலில் தொடங்கி கிழக்கு வாசலிலேயே கிரிவலத்தை முடிப்பது சிறந்ததாகும் .முதலில் செங்கம் சாலை பிரிகின்ற இடத்தில் நந்தி சன்னதியை வணங்கவேண்டும் .இவ் கிரிவல பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயில் மிகவும் புகழ் பெற்றது .

பௌர்ணமி கிரிவலத்தில் மலையாகவே இறைவன் உள்ளதால் ‘அண்ணாமலைக்கு அரோகரா ! நமசிவாய !!‘ என சிவா நாமங்களை மனதில் சொல்லியபடியே நடக்கவேண்டும் .பொறுமையாக அடிமேல் அடிவைத்து வளம் வருவது சிறந்ததாகும் .சித்தர்கள் பலரும் அரூபமாக நம்மோடு நடப்பதால் குறுக்கும் நெடுக்குமாக செல்லாமல் பயபக்தியோடு செல்லவேண்டும் .

  • கிரிவல கிழமைகள் மற்றும் அதன் பலன்கள்: ஞாயிறு அன்று கிரிவலம் நடந்தால் கைலாசவாசம் கிட்டும் ,திங்கள் அன்று வளம் வலம் வந்தால் சொர்க வாசல் கிட்டும் ,செவ்வாய் அன்று வலம் வந்தால் சொத்து வாங்கலாம் ,துங்கங்கள் நிகழாது ,புதன் அன்று வலம் வந்தால் வித்யாலாபம் கிடைக்கும் ,வியாழன் அன்று வலம் வந்தால் திருமணம் ,மகப்பேறு  ஆகிய பாக்கியங்கள் கிட்டும் ,வெள்ளி கிழமை வலம் வந்தால் கடன் தோலை நீங்கும் ,திருமணம் நடக்கும் ,கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள் ,சனி கிழமை வலம் வந்தால் சனி பீடை அண்டாது ,வறுமை நோய் அகலும் .பௌர்ணமி அன்று நடந்தால் எல்லா பேறுகளும் கிடைக்கும் ,மாத பிறப்பு அன்று நடந்தால் சந்ததி தழைக்கும்.
  • பகவான் ரமண மகரிஷி ஜீவ சமாதி ஆனா இடம் இந்த திருவண்ணாமலை,அவர் அமர்ந்த பாதாள லிங்கம் மற்றும் மலைக்கு பின்புறம் நேரே அமைந்துள்ள அண்ணாமலையார் தனி கோயிலுக்கும் கண்டிப்பாக தரிசிக்க வேண்டும் .இவர்களை தரிசித்தால் மரண பயத்தில் இருந்து விடுபடலாம் .  

திறந்திருக்கும் நேரம் :
காலை 5 .00 -12 .30 மாலை 3 .30 – 9 .30 வரை

செல்லும் வழி:
சென்னையில் இருந்து சுமார் 200 km தொலைவில் உள்ளது . சென்னையில் இருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன ,மற்றும் ரயில் வசதியும் உள்ளது .

Location:

அண்ணாமலைக்கு அரோகரா ! நமசிவாய !!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *