Sri Arthanareeswarar Temple- Egmore

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் -எழும்பூர்

இறைவன் : அர்த்தநாரீஸ்வரர்

தாயார் : திரிபுரசுந்தரி

ஊர் : எழும்பூர்

மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு

Sri Arthanareeswarar Temple-Egmore
  • இது ஒரு தேவார வைப்பு தலமாகும் , அப்பர் தன் ஆறாம் திருமறையில் இக்கோயிலை பற்றி பாடியுள்ளார் . அவர் வாழ்ந்தகாலம் 7 நூற்றாண்டு ஆதலால் இக்கோயில் 1000 வருடங்கள் பழமையானது என்று கருதபடுகிறது .
  • தொண்டைமண்டலத்தில் உள்ள 24 கோட்டங்களில் புழல் கோட்டத்திற்க்கு உட்பட்ட நாடுகளில் எழுமூர் ஒன்று, அவ் ஊர் இப்பொது எழும்பூர் என்று அழைக்கப்படுகிறது .
  • இக்கோயிலில் அர்தநாரீஸ்வரரை லிங்க மேனியாக அருள்தருகிறார் அவர் 3 1 /2 அடி விட்டம் கொண்ட பெரிய திருமேனியாக காட்சி தருகிறார் . இவ் லிங்கம் கயிலை இருந்து கொண்டுவந்ததாக கூறப்படுகிறது ஆதலால் இவரை தரிசிப்பது புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசிப்பதற்கு சமமாகும் . மேற்கு நோக்கி முகம் அர்தநாரீஸ்வர்ருக்கு உள்ள திசையாகும் சிவசக்தி அம்சமான இவரை தரிசித்தால் இம்மை மறுமை இரண்டிலும் விருப்பப்படுகிற வாழ்வை பெறலாம் .
  • லிங்கத்தின் பின் புறம் அர்த்தநாரீஸ்வரர் உருவமாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறார் .
Sri Arthanareeswarar Temple-Egmore
Moolavar
  • திரிபுரசுந்தரி அம்மையார் தெற்கு நோக்கி தனி சன்னதியில் உள்ளார் . மூலவருக்கு வலது புறத்தில் லட்சுமி நாராயணருக்கு தனி சன்னதி உள்ளது. ஒரே இடத்தில சிவசக்தி மற்றும் லட்சுமி நாராயணர் ஆகியோர்களை காண்பது நம் உள்ளத்தில் எல்லையில்லாத ஆனந்தத்தை தருகிறது .
  • சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் ஒருவர் தன் வற்றிய குளத்தில் தூர் வாரும்போது இவ் லிங்கத்தை கண்டுள்ளார் , லிங்கத்தை வெளியே எடுத்து கொட்டகை அமைத்து வழிபட்டுள்ளார் இவ் பகுதி அன்பர்கள் ,நாளடைவில் இக்கோயிலுக்கு சிறிய கோபுரம் அமைத்து நிறுவியுள்ளார் . இக்கோயில் மிகவும் சிரியதாகும் .

செல்லும் வழி:
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாஸ் பிரகாஷ் (தற்போது ஹோட்டல் சுதா) ஹோட்டல் அருகில் ஆராஅமுதன் கார்டன் முதல் தெருவில் உள்ளது .

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *