Sri Agatheeswarar Temple – Ponneri

ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் – பொன்னேரி

Sri Agatheeswarar Temple - Ponneri

இறைவன் : அகத்தீஸ்வரர்

இறைவி : அனந்தவல்லி

தலதீர்த்தம் : அக்னி தீர்த்தம்

தல விருட்சம் : வில்வம்

ஊர் : பொன்னேரி

மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு

அகத்திய மாமுனிவர் பொன்னேரி சுற்று பகுதியில் 108 சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் . அதில் இக்கோயிலும் ஒன்றாகும் . ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . 1000 வருடங்கள் மேற்பட்ட பழமையான கோயிலாகும் . இக்கோயில் ராஜராஜ சோழன் கட்டிய கோயிலாகும் .

கோயிலின் வெளிப்புறத்தில் அழகிய 16 கால் மண்டபத்தை நாம் காணலாம் . அதன் அருகில் அக்னி தீர்த்தம் பரந்து விரிந்து காணப்படுகிறது . நாம் இப்போது 3 அடுக்கு ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கோடி மரம் மற்றும் வெளி பிரகாரத்தை நாம் காணலாம் . கொடி மரத்திற்கு முன் சிறிய நந்தி மணடபம் உள்ளது அவரை தரிசித்து விட்டு நாம் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபத்தை கடந்து உள்ளே சென்றால் அகத்தீஸ்வரர் கருவறையை நாம் காணலாம் . நாம் அகத்தீஸ்வரரை வணங்கிவிட்டு வளம் வந்தால் அனந்தவல்லி தாயார் சன்னதியை காணலாம் . அகத்தீஸ்வரரின் கருவறை கஜபிருஷ்டம் அமைப்பில் காணப்படுகிறது .

இக்கோயிலுக்கு பலர் நன்கொடைகளை பல காலகட்டங்களில் வழங்கி வந்துள்ளார்கள். இங்குள்ள ஒரு தூணில் ராஜராஜ சோழன் சிலை மற்றும் மும்முடி சோழரின் சிலையும் வடிக்கப்பட்டுள்ளது . அதுமட்டும் இல்லாமல் விஜயநகர மன்னனின் சிலையும் உள்ளது .

கோயிலின் வெளிப்பிரகாரத்தில் வளம் வந்தால் கோயிலின் சுவற்றில் தேவார பதிகங்களை கோயிலின் சுவற்றில் எழுதியுள்ளார்கள் . இக்கோயில் பழங்காலத்தில் கும்பமுனி மற்றும் கும்பமுனிமங்கலம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-agatheeswarar-temple-ponneri.html

திறந்திருக்கும் நேரம் :
காலை 7 . 00 – 12 .00 , மாலை 4 .00 – 8 .00 வரை

செல்லும் வழி:

சென்னையில் இருந்து வடமேற்கு பகுதியில் சுமார் 38 km தொலைவில் பொன்னேரி அமைந்துள்ளது . சென்னை – கொல்கத்தா சாலையில் சென்றால் தச்சூர் X ரோடு வரும் அந்த சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி சுமார் 5 km தொலைவில் சென்றால் பொன்னேரியை அடையலாம் .

Location :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *