Sri Aadhimoola perumal -Vadapalani

ஸ்ரீ ஆதிமூல பெருமாள் கோயில் – வடபழனி

Sri Aadhimoola perumal, vadapalani
Entrance

இறைவன் : ஸ்ரீ ஆதிமூல பெருமாள் , கஜேந்திர வரதராஜ பெருமாள்

அம்பாள் : ஆதிலட்சுமி தாயார்

உற்சவ மூர்த்தி : ஸ்ரீ வரதராஜ பெருமாள்

தல விருச்சகம் : அரசமரம்

ஊர் : வடபழனி , சென்னை

சென்னை வடபழனி முருகன் கோயிலின் அருகிலேயே அமைந்துள்ள மிக பழமையான கோயில் .600 வருடங்கள் பழமையான கோயில் .

இவ் கோயிலில் பரிவார தெய்வங்களே பரிகார தெய்வங்களாகவும் அருள்வது அபூர்வமான ஒரு அமைப்பாகும்

ஸ்வாமி மேலிரு கரங்களில் சங்கு ,சக்ரம் ஏந்தி ,கீழிரு கரங்களில் அபய,ஆஹ்வான ஹஸ்த முத்திரைகளை காட்டி,ஒரு காலை மடித்து கொண்டு மற்றொரு காலை தாமரை மலரின் மேல் வைத்தபடி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.

பிரகாரத்தின் இடது புறத்தில் ஸ்ரீ ஆதிலட்சுமி தாயார் சந்நிதி உள்ளது . தாயார் மேலிரு கரங்களில் அபய ,வரதம் காட்டி அமர்ந்த நிலையில் காட்சிதருகிறார் .

புராண காலத்தில் “ஆதிமூலமே ,அனாத ரட்சகா” என்ற கஜேந்திரனின் குரலை கேட்டு ஓடோடி வந்து அருள் புரிந்த பெருமாள் ,சகலத்துக்கும் மூலமான அந்த பரம்பொருள் இக்கோயிலில் ஆதிமூலப் பெருமாளாக காட்சி தருகிறரர் .

நோய்,கடன் மற்றும் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட ஒவொரு புதன் கிழமை அன்றும் பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி,துளசி தளம் கொண்டு அர்ச்சனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்

திருமண தடை நிவர்த்தி

திருமண தடை உள்ள ஆண் மற்றும் பெண் யாராக இருந்தாலும் 16 செவ்வாய் கிழமை இக்கோயிலுக்கு வந்து மூன்று மாலைகளுடன் அர்ச்சகர் சொல்லுவது போல் பரிகாரம் செய்தால் திருமண தடை நீங்கி
விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை .

கரு காக்கும் கற்பக ஸ்வரூபிணி

இவ் ஆலயத்தின் தலவிருச்சமான அரச மரத்தின் அடியில் கற்பக ஸ்வரூபிணி தாயார் ,நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் கருக்காக்கும் தாயாராக அருள்புரிகிறார் .கருவற்ற பெண்கள் தங்களுக்கு சுக பிரசவம் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு சுக பிரசவம் ஆனவுடன் நன்றி செலுத்தவும் வருகின்றனர் .

குழந்தை வரம் தரும் சந்தன கிருஷ்ணன்

குழந்தை பாக்யம் வேண்டும் என்று வேண்டுபவர்கள் ரோகிணி நட்சத்திரம் அன்று வந்து சங்கல்ப பூஜையில் கலந்துகொண்டு அர்ச்சகர் சொல்வது போல் செய்து அரசமரத்தில் தொட்டில் கட்டி வேண்டினால் கண்டிப்பாக குழந்தை பாக்யம் கிடைக்கும் என்பது பக்த்தர்கள் நம்பிக்கை .

புதன் கிழமைதோறும் பெருமாளுக்கு திருமஞ்சனமும் , வெள்ளிக்கிழமை அன்று அம்பாளுக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது .

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை 6 .30 -11 .30
மாலை 4 .30 -8 .15 வரை

அருகில் உள்ள கோயில்கள்

1 . வடபழனி முருகன் கோயில்
2 . ஸ்ரீ வேங்களீஸ்வரர் திருக்கோயில்

Location Map :

4 Comments

Cancel reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *