Adi Jagannathar Perumal Temple- Thiruppulani

ஆதி ஜெகநாதர் கோவில் – திருப்புல்லாணி

Adi Jagannathar perumal, Tirupullani

இறைவன் : ஆதி ஜெகநாதர்

தாயார் : கல்யாணவல்லி

தீர்த்தம் : ஹேம,சக்ர தீர்த்தம்

விருச்சகம் : அரசமரம்

கோலம் : வீற்றிந்த, சயன

ஊர் : திருப்புல்லாணி

மாவட்டம் : ராமநாதபுரம் ,தமிழ்நாடு

மங்களாசனம் : திருமங்கை ஆழ்வார்

Adi Jagannathar perumal, Tirupullani
Dharbasayana Ramar
Dharbasayana Ramar-Tks to temple adviser
  • 108 திவ்ய தேசங்களில் 96 வது திவ்யதேசமாகும் . பாண்டியநாட்டு திவ்யதேசமாகும்
  • ஜெகநாதர்களில் மிக பழமையான ஜெகநாதர் கோயில் என்பதால் ஆதி ஜெகநாதர் என்று அழைக்கப்படுகிறார் .
  • இக்கோயிலின் தர்பாசன ராமர் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் . ராமாவதாரத்தில் இராவணன் சீதையை மீட்க சேதுக்கரையில் ராமர் வானர படையுடன் தங்கியிருந்தபோது கடலை கடப்பதிற்கு எதாவது உபாயம் சொல்ல வருணனை நோக்கி பிராத்தனை செய்ய 7 நாட்கள் தர்ப்பை புல்லின் மீது சயனித்து யோசனை செய்ததாகவும் அதனால் இவருக்கு வடமொழியில் தர்பசயணம் பெயர் பெற்றது என்று கூறப்படுகிறது .
  • இரண்டு மூலவ மூர்த்தி அருள் புரியும் திருத்தலம்
  • தசரதன் மகப்பேறு வேண்டி உலகத்தை சுற்றிவரும்போது இந்த பெருமானை 60000 மனைவிகள் இருந்தும் குழந்தை பேரு இல்லையே என்று வேண்ட பெருமாள் அதர்க்கு ஆசி வழங்கினார் .தசரதன் இத்தலத்தில் நாகப்ரதிஷிடை (சந்தானகிரிஷ்ணன் ) செய்து பின் புத்ர காமேஷ்டி யாகம் செய்ய பெற்றதாக புராணம் கூறுகிறது .
  • அருகில் உள்ள சேதுக்கரையில் (4 Km ) இருந்துதான் ராமர் பாலம் காட்டினார் சேது என்றால் பாலம் பாலத்தின் தரைப்பகுதி என்பதால் சேதுக்கரை என்று அழைக்கப்படுகிறது .
  • இங்குள்ள நரசிம்மர் ஸ்ரீதேவி ,பூதேவியுடன் காட்சி தருகிறார் ,பெரும்பாலும் மஹாலக்ஷிமியுடன் காட்சி தரும் கோலமே நாம் காணபோம். இவ் தரிசனம் பழமையான கோயில்களில் காணப்படும் தரிசனம் ஆகும் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/adi-jagannathar-perumal-temple.html

செல்லும் வழி
ராமநாதபுரத்தில் இருந்து 10 km தொலைவில் உள்ளது. ராமநாதபுரத்தில் ஆட்டோ எடுத்துக்கொண்டு சேதுக்கரை ,திருப்புல்லாணி மற்றும் உத்தரகோசமங்கை ஆகிய இடத்துக்கு சென்று வரலாம் ,ஆட்டோவிற்கு 300 இருந்து 400 ஆகும் .

Location :

5 Comments

Cancel reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *