Adhi Kumbeswarar Temple- Kumbakonam

ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் கோயில் – கும்பகோணம்

இறைவன் : கும்பேசுவரர்

இறைவி :மங்களாம்பிகை

தல தீர்த்தம் : மகா மகம் ,காவிரி

தல விருச்சம் : வன்னி

ஊர் : கும்பகோணம்

மாவட்டம் : தஞ்சாவூர்

பாடியவர்கள் : சம்பந்தர் ,அப்பர்

தேவார பாடல் பெற்ற தென்கரை தலங்களில் இது  26 வது தலமாகும் . 276 தேவார சிவதலங்களில் இது 89 வது சிவத்தலமாகும் . அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விஷ்ணு சக்தி பீடம் ,மந்திரிணி சக்தி பீடமாகும் .அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார் .

தல வரலாறு :

உலகம் அழிய பிரளய நேரம் வந்தபோது ,பிரம்மா தன படைப்பு ஆற்றல் எல்லாவற்றையும் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் இட்டு அந்த குடத்தை இமயமலையின் உச்சியில் பாதுகாப்பாக வைத்தார் . பிரளய காலம் வந்தது கடல் பொங்கி இமய மலை உச்சி வரை சென்றது .அப்போது அங்கு பாதுகாப்பாக வைத்திருந்த குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வரும்போது பிரளய நீர் வடிந்த போது அவ் குடமானது தரையை தட்டி நின்றது ,அவ்வாறு குடம் தரையை தட்டி நின்ற இடமே நாம் கும்பகோணம் என்று அழைக்கிறோம் . புராண காலத்தில் இவ் தலத்தை ‘குடமூக்கு ‘ என்று அழைத்தார்கள் . ஈசன் தரை தட்டி நின்ற அமுத குடத்தின் மீது அம்பு எய்தி அவ் குடத்தை உடைத்தார் ,குடம் உடைந்து அமுதம் கிழே கொட்டியது .அவ் அமுதம் கொட்டிய மணலை கொண்டு ஒரு லிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார் .இதனால் இவர் ஆதி கும்பேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார் .

இறைவன் சுயம்பு மூர்த்தியாவார் ,இவர் கிழே பருத்தும் ,மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படுகிறார் .இவ் வடிவம் ஆனது ஒரு குட வடிவம் போல் இருக்கும் .இவ் லிங்கத்திற்கு புணுகு சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது .இறைவனுக்கு தங்க கவசம் சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது .

மகா மகக்குளம்:

குரு சிம்ம ராசியில் இருக்க ,சந்திரன் கும்ப ராசியில் இருக்கும்போது பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது .இவ் தீர்த்தம் அமுத கும்பம் வழிந்தோடி தங்கியதால் ‘அமுத சரோருகம் ‘ என்றும் அழைக்கப்படுகிறது .மகா மக உற்சவ நாளில் கங்கை ,சரயு, யமுனை ,சரஸ்வதி ,சிந்து ,நர்மதை ,கோதாவரி ,கிருஷ்ணா, காவேரி ஆகிய 9 புண்ணிய நதிகளும் நவ கன்னியர்களாக,மக்கள் தங்களுக்குள் மூழ்கி தொலைத்த பாவங்களை போக்க ,இங்கு வந்து மகா மக குளத்தில் நீராடியதால் இத்தீர்த்தம் ‘கன்னியர் தீர்த்தம் ‘என்ற பெயரையும் பெற்றது .

இத்தலத்தில் நடக்கும் மகாமக தீர்த்தம் மற்றும் மகாமக உற்சவம் உலக புகழ்பெற்றது .12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த உற்சவத்தின் போது லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் .இவ் மகாமக குளம் 15 ஏக்கர் பரப்பளவில் ,நான்கு கரைகளில் 16 சன்னதிகளுடையதாய், நடுவில் 9 கிணறுகளை கொண்டு விளங்குகிறது.

தல வரலாற்றின் படி அமுதகும்பம் வைத்திருந்த இடம் கும்பேசம், அமுத கும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமாக இடம் சோமேசம், அமுத கும்பத்தில் சாத்திருந்த வில்வம் இடம் நாகேசம், அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் அபிமுகேசம், பெருமான் அமுத கும்பத்தை வில்லால் சிதைத்த இடம் பாணபுரேசம்,கும்பம் சிதறியபோது அதன்மீதுருந்த பூணுல் சிதறிய இடம் கௌதமீசம் என வழங்கப்படுகிறது .

சிவனும் தாயாரும் ஆதியில் இத்தலத்திற்கு வருவத்திற்கு முன்பே விநாயகர் இங்கு வந்து காத்திருந்தால் இத்தல விநாயகர் ‘ஆதி விநாயகர்’ எனப்படுகிறார் .முருக பெருமான் சூரஸம்ஹரத்திற்கு செல்லும் முன்பு இங்கு வந்து மந்திர பீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார் .இங்குள்ள முருகன் ஆறு திருமுகங்களுடன் ஆறு திருக்கரத்துடன் காணப்படுகிறார் ,இது ஒரு சிறப்பான அரிதான தரிசனம் ஆகும் .

மங்களநாயகி :

இத்தல தாயார் மங்களநாயகி ,மந்திர பீட நலத்தால் என்ற பெயர்களோடு அழைக்கிறார்கள். ஈசன் தன் திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதுபோல் ,தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு தந்து அருளியுள்ளார் .தாயாருக்கு என 36 ஆயிரம் கோடி மந்திர சக்தி உள்ளதால் ,72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக ‘மந்திரபீடேஸ்வரி ‘ என்ற திருநாமம் பெற்று விளங்குகிறாள் .இதுவே 51 சக்தி பீடங்களுக்கு முதன்மையானது என்று கருதுகிறார்கள் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 மணி முதல் நண்பகல் 1 .00 மணி வரை ,மாலை 4 .00 மணி முதல் இரவு 8 .00 மணி வரை

செல்லும் வழி:

கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது . சென்னையில் இருந்து நிறைய பேருந்துகள் மட்டும் ரயில் வசதிகள் உள்ளன .மற்றும் மதுரை ,திருச்சி ,சேலம் மற்றும் கோவை இருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

Location:

இவ் ஊரில் மிகவும் புகழ் பெற்ற சைவ ஹோட்டல் மங்களாம்பிகை விலாஸ் ஹோட்டல் உள்ளது .

English : When the world was facing destruction due to the devastating tsunami, Lord Brahmma approached Lord Shiva to know wherefrom He had to restart creation.  Lord Shiva suggested that Brahmma make a magic pot with the sand collected from various sacred places and float it in the flood water and also taught the procedure of leaving it on the water.  The pot stopped at a place.  Lord Shiva shot an arrow on the pot.  The nectar spilled and spread on all directions.  That nectar mixed with the sand and became a Linga.  This Linga is Kumbeswarar.

Om Nama shivaya !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *